பி.எம்.இந்தியா
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், மகளிர் எஃப்57 குண்டு எறிதல் பிரிவில், தங்கப்பதக்கம் வென்ற ஷர்மிளாவிற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியில், அவர் வெளிப்படுத்திய திறமை ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்றும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பாரா தடகளப் பிரிவில், தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இருபது ஆண்டு கால காத்திருப்புக்கு, இது முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது எதிர்கால முயற்சிகளுக்கு, திரு நரேந்திர மோடி தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;
கிளாஸ்கோவில் வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது!
மகளிர் எஃப்57 குண்டு எறிதல் பிரிவில், மிகவும் சிறப்பாக செயல்பட்டுத் தங்கப் பதக்கம் வென்றதற்கும், இந்தப் போட்டியில், சிறப்பானத் திறனை வெளிப்படுத்திய ஷர்மிளாவிற்கு வாழ்த்துகள். இந்த குறிப்பிடத்தக்க செயல்பாடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பாரா தடகளப் பிரிவில் தங்கப் பதக்கம் வெல்வதற்கான இருபது ஆண்டு கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்.
(Release ID: 2290309)
***
TV/SV/KR
History has been created in Glasgow!
— Narendra Modi (@narendramodi) July 28, 2026
Congratulations to Sharmila for a very special Gold in the Women's Shot Put F57 event and also for a season-best throw. This remarkable performance ends a two decade long wait for a Para Athletics Gold at the Commonwealth Games.
My best…