பி.எம்.இந்தியா
கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 69 கிலோ பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹர்ஜிந்தர் கவுருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹர்ஜிந்தரின் செயல்பாடு, அவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாக அமைந்ததைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தப் போட்டிகளில் இந்தியப் பளுதூக்குதல் பிரிவில் பங்கேற்ற வீரர்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுவதைக் காண்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.
ஹர்ஜிந்தர் கவுரின் எதிர்கால முயற்சிகளுக்கு திரு மோடி, தனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 69 கிலோ பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹர்ஜிந்தர் கவுருக்கு வாழ்த்துகள். நேற்று அவர் வெளிப்படுத்திய செயல்பாடு அவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாக அமைந்தது, குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டிகளில் நமது பளுதூக்கும் வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவதைக் காண்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஹர்ஜிந்தரின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.
#CWG2026”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291351®=3&lang=1
****
TV/BR/SH
Congratulations to Harjinder Kaur for winning a Silver in the Women's 69 kg event at the Commonwealth Games in Glasgow. Also noteworthy is the fact that her performance yesterday was a personal best. It is gladdening to see our weightlifters perform so well in the Games. My best… pic.twitter.com/uK7igceWWv
— Narendra Modi (@narendramodi) July 29, 2026