பி.எம்.இந்தியா
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முகமது பசில் மோர்சிங்கனகத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தடகளப் போட்டியில் அவரது வேகம், மன உறுதிக்குப் பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர், இந்த விளையாட்டு சீசனில் அவரது சிறப்பான செயல்பாடாக அமைந்துள்ளதை பிரதமர் குறிப்பிட்டுள்ளார். முகமது பசில் மோர்சிங்கனகத்தின் கடின உழைப்பிற்கும், அவர் செலுத்திய முழு கவனத்திற்கும் கிடைத்துள்ள வெற்றி இது என்று பிரதமர் கூறியுள்ளார். எதிர்காலத்தில் அவர் மென்மேலும் சாதனைகள் படைப்பதற்காக பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
முகமது பசில் மோர்சிங்கனகத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கு இந்த வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. அவரது வேகம், மன உறுதியை இந்த வெற்றி எடுத்துக்காட்டுகிறது. அதேசமயம் இந்த விளையாட்டு சீசனில், சிறந்த திறமையை வெளிப்படுத்தி, பதக்கம் வென்றுள்ள அவருக்கு எனது வாழ்த்துகள். அவரது இந்த வெற்றி கடின உழைப்பிற்கும், முழுமையான கவனத்திற்கும் கிடைத்துள்ளது. எதிர்காலத்தில் அவர் தொடர்ந்து பல்வேறு புதிய உச்சங்களை எட்டுவதற்கு வாழ்த்துகிறேன்.
*
TV/SV/RJ/SE
A superb Silver for Mohammed Basil Morssinganakath! What a sprint and display of determination! Congratulations to him for the success and also achieving his Season Best. His success reflects his hard work and focus. May he continue to scale new heights in the times to come.…
— Narendra Modi (@narendramodi) July 30, 2026