Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 54 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்ற பிரீத்திக்குப் பிரதமர் வாழ்த்து


2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 54 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற பிரீத்திக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரீத்தி தொடர்ச்சியாக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.

இந்தச் சாதனைக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர், வரும் காலங்களில் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“காமன்வெல்த் பெண்களுக்கான 54 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்ற பிரீத்திக்கு வாழ்த்துகள். அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். வரும் காலங்களில் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.”

****

(Release ID: 2293174)

TV/PLM/RJ