பி.எம்.இந்தியா
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் நிகழ்ந்த துயரமான விபத்து குறித்துப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார். விபத்தில் தங்களின் அன்பிற்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், உள்ளூர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்துப் பிரதமர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்து குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் தங்களது அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உள்ளூர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 வழங்கப்படும்.”
Release ID: 2268100
****
TV/EA/SH
Deeply pained to hear about a mishap in Surat district, Gujarat. My condolences to those who have lost their loved ones. May the injured recover at the earliest. Rescue operations are underway and authorities are providing all possible assistance at the accident site.
— PMO India (@PMOIndia) June 2, 2026
An…