Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை நாட்டிற்கு அர்பணித்து, இரண்டு பொதுக்கூட்டங்களில் பிரதமர் உரையாற்ற உள்ளார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், 2017, செப்டம்பர் 17 அன்று குஜராத் மாநிலம் கெவடியாவில் உள்ள சர்தார் சரோவர் அணையை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.
4.73 மில்லியன் ஏக்கர் அடி (எம்.ஏ.எப்.) நீரை தேக்கி வைக்கும் வகையில், சமீபத்தில் இந்த அணையின் உயரம் 138.68 மீட்டராக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் பங்கேற்பு மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மகராஷ்டிரா ஆகியவை பெருமளவில் பயன் பெறும்.

குஜராத்தின் நீர் பற்றாக்குறை பகுதிகளுக்கு விரிவான கால்வாய் மற்றும் குழாய்கள் மூலம் நர்மதா ஆற்றின் நீரை எடுத்துச் செல்ல இத்திட்டம் உதவியுள்ளது. இத்திட்டத்தின் பாசனம் மூலம் 10 லட்சம் விவசாயிகள் மற்றும் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளதால், 4 கோடி மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர் கொண்டு செல்வதற்கான மிகப் பெரிய மனித முயற்சியாக இத்திட்டம் வர்ணிக்கப்படுகிறது. ஆண்டுதோறும், பில்லியன் யூனிட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணைப் பகுதியிலிருந்து சர்தார் வல்லபபாய் படேலை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டு வரும் அவரது பிரம்மாண்டமான உருவச் சிலை மற்றும் நினைவு வளாகம் கட்டப்பட்டும் இடமான சாது பேட் வரை பிரதமர் பயணம் செய்வார். இத்திட்டத்தின் முன்னேற்றப் பணிகள் குறித்து பிரதமருக்கு எடுத்துரைக்கப்படும். இத்திட்டத்தில், 182 உயர சிலை, கண்காட்சி கூடம், நினைவுப்பூங்கா மற்றும் விருந்தினர் மையம் ஆகியவை அடங்கும்.

தபோய் என்ற இடத்தில், நர்மதா மகோத்சவத்தின் நிறைவு விழாவில் பிரதமர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சியின்போது தேசிய மலைவாழ் சுதந்திர போராட்ட வீரர்களின் அருங்காட்சியத்திற்கான அடிக்கல்லை நாட்டுவார்.

அதன் பின்பு, பிரதமர் அம்ரேலிக்கு செல்கிறார். ஏ.பி.எம்.சி.-யின் புதிய விற்பனைச்சந்தை தளத்தை அவர் திறந்து வைக்கிறார். மேலும், அமர் டெய்ரி-யின் புதிய தொழிற்சாலைகளை திறந்து வைக்க உள்ள அவர், தேன் உற்பத்தி மையத்திற்கான அடிக்கல்லை நாட்டுகிறார். அம்ரேலியில் கூட்டுறவு மாநாட்டில் உரையாற்றுகிறார்.

***