Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடியரசுத் தலைவர் பிறந்த நாள் – இரு புத்தகங்களை வெவிளியிட்டார் பிரதமர்

குடியரசுத் தலைவர் பிறந்த நாள் – இரு புத்தகங்களை வெவிளியிட்டார் பிரதமர்

குடியரசுத் தலைவர் பிறந்த நாள் – இரு புத்தகங்களை வெவிளியிட்டார் பிரதமர்


குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு குடியாரசுத் தலைவர் மாளிகையில் உள்ள வரலாறு சிறப்பு மிக்க தர்பார் மண்டபத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் “குடியரசுத் தலைவர் உரைகள் தொகுதி 3 மற்றும் “குடியரசுத் தலைவரின் ஓய்விடங்கள்” ஆகிய இரு நூல்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டார். குடியரசுத் தலைவர் திரு பிரணாப் முகர்ஜி அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக இது அமைந்தது.

80 வயதை எட்டியதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர். அவரது அரசியல் வாழ்வில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள், பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து தனது பொறுப்புகளை நிறைவேற்றியுள்ளார் என்றும் கூறினார். குடியரசுத் தலைவரோடு சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது தனக்கு பெருமை என்று பிரதமர் குறிப்பிட்டார்.

வெளியிடப்பட்ட இரு புத்தகங்களும், மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளதோடு, குடியரசுத் தலைவரின் கூர்மையான அறிவை விளக்குவதாக உள்ளது என்றும் பிரதமர் பாராட்டினார்.

***