Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குரு பூர்ணிமா தினத்தையொட்டி ஆசிரியர்களின் பங்களிப்பை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துகொண்டுள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

ஆசிரியர்கள் அறிவைப் புகட்டுவதுடன், மாணவர்களுக்கு நேர்மறையான சிந்தனை, உன்னதமான எண்ணங்கள், விழுமியங்கள் வாயிலாக அவர்களது எதிர்காலத்தை வடிவமைக்கிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொருவரும் தங்களது ஆசிரியர்களின் கொள்கைகளை வாழ்வில் வழிகாட்டும் சக்தியாக கருத வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். ஆசிரியர்களின் பங்களிப்பை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.

சமூக ஊகட எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

சரியான வழிகாட்டுதலை வழங்குபவர், அறிவையும், வாய்மையையும், நேர்மையையும் போதிப்பவர், கல்வி அறிவை அளிப்பவர், வாழ்க்கையின் உண்மைகள் குறித்த புரிதலை வளர்ப்பவர், சுய வளர்ச்சிக்கு வழிவகுப்பவர் ஆகியவை குருவின் 6 அம்சங்களாக கருதப்படுகிறது என்று இந்த சமஸ்கிருத சுபாஷிதம் தெரிவிக்கிறது.    

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290875&reg=3&lang=1  

***

TV/SV/RJ/KR