பி.எம்.இந்தியா
கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என்று பெயர் மாற்றம் செய்வதற்கான பரிந்துரைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகு அரசியலமைப்பு சாசனம் 3வது பிரிவின் கீழ் கருத்து கேட்புக்காக கேரளா (பெயர் மாற்றம்) மசோதா 2026ஐ கேரள சட்டப்பேரவைக்கு அனுப்பி வைப்பார். அம்மாநில சட்டப்பேரவையிடம் இருந்து கருத்துக்களை பெற்ற பிறகு கேரளா என்ற பெயரை கேரளம் என்று பெயர் மாற்றம் செய்வதற்காக நாடாளுமன்றத்தில் கேரளா (பெயர் மாற்றம்) மசோதா 2026ஐ அறிமுகம் செய்வதற்காக குடியரசுத்தலைவரின் பரிந்துரையை பெறுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.
கேரளா என்ற பெயரை கேரளம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கேரள மாநில சட்டப்பேரவையில் 2024 ஜுன் 24 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு பெயர் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசிடம் கேரள அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232093®=3&lang=1
***
AD/IR/RK/SH
The decision of the Union Cabinet on alteration of the name of Kerala to Keralam reflects the will of the people of the state. It is in line with our efforts to strengthen the connect with our glorious culture. https://t.co/pdzsgiU1l2
— Narendra Modi (@narendramodi) February 24, 2026