சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டம் கரன்பூரில் உள்ள கோப்ரா படையின் செயல்பாட்டு முகாமில், பிரதமர் திரு நரேந்திர மோடி பாதுகாப்புப் படை வீரர்களுடன் இன்று (08.11.2026) தீபாவளியைக் கொண்டாடினார். பஸ்தர், அபுஜ்மத் பகுதிகளில் நக்சல் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயிற்சி அளிக்கும் முக்கிய மையமாக இந்த முகாம் செயல்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியில் வீரர்களிடையே பேசிய பிரதமர், கார்கில், இமயமலையில் உள்ள லெப்சா, கடலோரப் பகுதியான சர் க்ரீக், ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் உள்ளிட்ட இடங்களில் இதற்கு முன்பு பாதுகாப்புப் வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். நாட்டின் எல்லைகளிலும் உள்நாட்டிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வீரர்கள் அனைவரும் தமது குடும்பத்தினர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு தீபாவளி இந்தியாவுக்கு மிகவும் சிறப்பானது எனவும், பல ஆண்டுளாக நீடித்த மாவோயிஸ்ட் பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டு, நாட்டின் அனைத்து மாவட்டங்களும் நக்சல் பாதிப்பிலிருந்து விடுபட்டுள்ளன எனவும் அவர் கூறினார். இதற்காகப் பாடுபட்ட லட்சக்கணக்கான பாதுகாப்புப் படையினரின் தியாகத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் 140 கோடி மக்களின் சார்பில் நன்றி தெரிவிக்கவே பஸ்தருக்கு வந்ததாகப் பிரதமர் கூறினார்.
ஒரு காலத்தில் பீகார், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட சுமார் 20 மாநிலங்களின் 230-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நக்சல் வன்முறை நிலவியதை அவர் சுட்டிக் காட்டினார். சத்தீஸ்கரில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
2004 முதல் 2013 வரை நக்சல்களைவிட பாதுகாப்புப் படையினரின் உயிரிழப்பு அதிகமாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு மத்திய அரசின் உறுதியான நடவடிக்கைகளால் இந்த நிலை மாற்றப்பட்டது எனவும், நக்சல்கள், பிரிவினைவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டது எனவும் அவர் கூறினார். இதனால் ஆயுத விநியோகம், நக்சல்களின் நடமாட்டம், ஆட்சேர்ப்பு ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது எனவும், கடந்த 47 ஆண்டுகளில் முதல்முறையாக, கடந்த ஓராண்டில் பணியின்போது சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்றும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். சிஆர்பிஎஃப், கோப்ரா, எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை, சஷஸ்திர சீமா பால் படை, மாநிலக் காவல் துறையினர், பஸ்தர் கமாண்டோக்கள், பெண் வீரர்கள் ஆகியோரின் தியாகங்களையும் பிரதமர் பாராட்டினார்.
கடந்த 12 ஆண்டுகளில் நக்சலிசம், பிரிவினைவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றதுடன், வறுமைக்கு எதிரான போராட்டத்திலும் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்று அவர் கூறினார். தீபாவளிக்கு முன்பு வெளியான உலக வங்கியின் அறிக்கையின்படி, கடந்த 12 ஆண்டுகளில் 50 கோடி இந்தியர்கள் தீவிர வறுமையிலிருந்து மீண்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.
ஜன் தன் வங்கிக் கணக்குகள், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், முத்ரா கடனுதவி, சாலையோர வியாபாரிகளுக்கான ஸ்வநிதி திட்டம், ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு, இலவச உணவு தானியங்கள் திட்டம், கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள், தூய்மை இந்தியா திட்டம், வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் ஏழை மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்று அவர் கூறினார். இதனால் ஏழைக் குடும்பங்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறி, அவர்களிடம் புதிய தன்னம்பிக்கை உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய வெற்றிகள் முடிவல்ல எனவும் வளர்ச்சிக்கான புதிய தொடக்கம் என்றும் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பாதுகாப்புப் படையினரின் தியாகமும் உழைப்பும் வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதற்கான வலுவான அடித்தளமாக அமையும் என்று கூறி, அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து, பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334133®=3
****
SS/PLM/RJ
A very special Diwali with our brave security forces in Bastar, Chhattisgarh. https://t.co/7I5aOQdMSk
— Narendra Modi (@narendramodi) November 8, 2026
साल 2026 की ये दीवाली वाकई विशेष है! ये पहली दीवाली है- जब देश नक्सलवाद-माओवादी आतंक के खिलाफ दशकों पुरानी लड़ाई जीत चुका है। ये पहली दीवाली है- जब देश का हर जिला नक्सलवाद से मुक्त है। ये पहली दीवाली है- जब करोड़ों देशवासी नक्सलवाद के भय को परास्त कर चुके हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 8, 2026
47 साल बाद, पहली बार ऐसा हुआ है जब पिछले एक वर्ष में CRPF के एक भी जवान को duty के दौरान जान नहीं गंवानी पड़ी। ये देश की सही नीतियों और दृढ़ इच्छाशक्ति की जीत है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 8, 2026
हमने सेवा भाव से नक्सल प्रभावित इलाकों में लोगों के जीवन को बदला। इसलिए, नक्सलवाद से पीड़ित लोग भी सरकार और सुरक्षाबलों के साथ मजबूती से खड़े हुए: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 8, 2026
आज एक तरफ 50 करोड़ लोग भीषण गरीबी से बाहर आए हैं। दूसरी ओर, देश में नक्सली हिंसा का भी अंत हुआ है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 8, 2026