Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சமுத்ர பிரதாப் ரோந்து கப்பல் இந்தியக் கடலோரக் காவல் படையுடன் இணைக்கப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு


இந்தியக் கடல்சார் பாதுகாப்பில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கும் வகையில் சமுத்ர பிரதாப் என்ற ரோந்து கப்பல் இந்தியக் கடலோரக் காவல் படையுடன் இணைக்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த ரோந்து கப்பல் பல்வேறு நவீன வசதிகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு மற்றும் கடல்சார் திறனில் நாட்டின் தற்சார்பு இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வைக்கு வலுசேர்க்கும் வகையில் இது அமைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் விரிவான கடல்சார் நலன்களை பாதுகாப்பதற்கும், கடலோர கண்காணிப்பு பணிகளை மேம்படுத்துவதற்கும் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இது மேலும் உத்வேகம் அளிக்கும் என்று கூறியுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளை ஒருங்கிணைத்து நிலையான செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்தும் வகையில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது:

இந்தியக் கடலோரக் காவல் படையில் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய சமுத்ர பிரதாப் ரோந்து கப்பல் இணைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் தற்சார்பு, பாதுகாப்பு, நிலையான உறுதிப்பாடு ஆகியவற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

***

(Release ID: 2211954)

AD/SV/RJ/KR