பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு இன்று புதுதில்லியில் சந்தித்தது. இக்குழு சமையல் எரிவாயு விற்பனை மீதான விலையில் வித்தியாசத்தை சமன் செய்ய மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இது செயல் முறையில் சீர்திருத்தத்தை செய்வதற்கான முடிவாகும். சமையல் எரிவாயு விற்பனை செய்யும் யூரியா மற்றும் சமையல் எரிவாயு உற்பத்தியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் பல்வேறு விலை நிர்ணயித்து விற்பனை செய்துவருகின்றனர். அடிப்படை விலையைவிட அதிகமான அளவில் கூடுதலாக இந்த நிறுவனங்கள் சமையல் எரிவாயுவை சந்தைபடுத்தி வருகின்றன. இயற்கை எரிவாயுவை வழங்குவதற்கு பல்வேறு போக்குவரத்து நிறுவனங்கள் வெவ்வேறு விதமான கட்டணங்களை வசூலிக்கின்றன.
அமைச்சரவைக்குழு மேற்கொண்ட இந்த முடிவினால் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விற்பனை விலை ஒரேமாதிரியாக இருக்கும். இதை சந்தைப்படுத்தும் நிறுவனங்களும் முறைப்படுத்தப்படும். சந்தை விலையில் யூரியா மற்றும் சமையல் எரிவாயு உற்பத்தி நிறுவனங்களின் விற்பனை விலையில் உள்ள வித்தியாசம் வெகுவாக்க் குறைக்கப்படும்.
மேலும், இந்த விலை பாரபட்சமின்றி நிர்ணயிக்கப்படும். பெட்ரோலியம் மற்றும் எரிவாயு கட்டுப்பாட்டு வாரியம் சந்தை விற்பனையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ளும். சந்தை விற்பனை விலையில் உள்ள ஏற்றத்தைழ்வை சரி செய்வதற்கு இந்த நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. எதிர் காலத்தில் சந்தை விலையில் ஏற்படும் விலை உயர்வை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் முடிவு செய்யும். அமைச்சரவையின் இந்த முடிவு எதிர் காலத்தில் சமையல் எரிவாயு உள்கட்டமைப்பு முதலீடுகளை செய்யும் வகையிலும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையிலும் இருக்கும்.