Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச தொழிலாளர் அமைப்பின், அமைப்புசாரா பொருளாதாரத்திலிருந்து அமைப்பு பொருளாதாரத்துக்கு மாறுவதற்கான பரிந்துரை எண் 204க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பரிந்துரை எண் 204 – “அமைப்பு சாரா பொருளாதாரத்திலிருந்து அமைப்பு பொருளாதாரத்திலிருந்து அமைப்பு பொருளாதாரத்திற்கு மாறுதல்” திட்டத்தை ஏற்றுக் கொண்டதை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஒப்புதல் அளித்தது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 104வது மாநாடு ஜூன் 2015ல் ஜெனிவாவில் நடைபெற்றபோது, இத்தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இத்தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் சார்பாக, மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் அதில் கலந்து கொண்டார்.

சர்வதேச தொழிலாளர் நல அமைப்பின் அமைப்புச் சட்டத்தின் 19வது பிரிவின்படி, சம்பந்தப்பட்ட உறுப்பு நாடுகள் தீர்மானம் ஏற்றக் கொள்ளப்பட்ட ஒரு ஆண்டுக்குள், உரிய அமைப்பின் முன்னால் (இந்தியாவை பொறுத்தவரை நாடாளுமன்றம்) தீர்மானத்தை சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.

ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி, உறுப்பு நாடுகள், தங்கள் நாடுகளின் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழில்களில் இருந்து அமைப்பு சார்ந்த தொழில்களுக்கு மாறுவதற்கு வகை செய்து, அவர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்து, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, அமைப்பு ரீதியான வேலை வாய்ப்புகள், அமைப்பு சாரா வேலை வாய்ப்புகளாக மாறாமல் பாதுகாப்பது ஆகிவற்றை செய்ய வேண்டும். இத்தீர்மானம் நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளிகளுக்ம் பொருந்தும். இத்தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதால், எவ்விதமான நிதிச் செலவினமும் கிடையாது.

பின்னணி : சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்மானங்கள், உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை. இவ்வாறு ஏற்றுக் கொள்வது தானாக முன்வந்து செய்யும் நடவடிக்கையாகும். ஒரு முறை தீர்மானத்தை ஏற்றுக் கொண்டால், அது சம்பந்தப்பட்ட நாட்டை சட்டரீதியாக கட்டுப்படுத்தும். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்மானங்கள் கட்டாயம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை அல்ல. மாறாக, அவை நாடுகள் தங்கள் தொழிலாளர் தொடர்பாக வகுக்க வேண்டிய கொள்கைகள், நடைமுறைகள் போன்றவற்றுக்கான வழிகாட்டி. மரபு என்பது, ஒரு மாநாட்டின் தீர்மானங்களை திருத்துவது. தீர்மானங்களை ஏற்று விதிகளை திருத்துவது தொடர்பான முடிவுகளை, சம்பந்தப்பட்ட அரசுகள், அந்நாட்டில் உள்ள சட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை ஒட்டி முடிவெடுக்க வேண்டும்.

அமைப்பு சாரா பொருளாதாரத்தின் பன்முகத் தன்மையை கருத்தில் கொண்டு, அமைப்பு சாரா பொருளாதாரத்தின் இயல்பு மற்றும் எல்லை ஆகியவற்றோடு அமைப்பு பொருளாதாரத்தின் உறவுகளை பரிசீலித்து முத்தரப்பு வழிமுறைகளின் மூலம் முடிவெடுக்க வேண்டும். அமைப்பு பொருளாதாரத்திற்கு மாறுகையில், உறுப்பு நாடுகள், அதன் பன்முகத்தன்மை, அமைப்பு சாரா தொழிலாளர்களின் தேவைகள், அவர்களின் சூழல் மற்றும் பணியாற்றும் தொழிற்சாலைகள் ஆகிவயவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். கூடுதலாக, சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள பிரத்யேக சூழல்கள், சட்டதிட்டங்கள், கொள்கைகள், நடைமுறைகள், மனித உரிமைகள் மேம்பாடு, பாலின சமத்துவம், பாரபட்சமற்ற முறை ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.