Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச மகளிர் தினம் – பெண் சக்திக்கு பிரதமர் வணக்கம் செலுத்தினார்


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் சக்திக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வணக்கம் செலுத்தினார்.

“சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு, வெல்லமுடியாத மனப்பான்மை ஆகிய அனைத்தும் ஒன்றடங்கிய பெண் சக்திக்கு தலை வணங்குகிறேன்.
பெண் சக்தியை பொறுத்தவரை பொருளாதார அதிகாரம், சுய திறமை சார்ந்திருத்தல் மற்றும் சமூக சமத்துவம் உள்ளிட்ட அனைத்தையும் ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

தூய்மையான பாரதத்தை உருவாக்க பணியாற்றிய பெண் தலைவர்கள் மற்றும் புதிய முயற்சிகளை கவுரவிக்கும் மாநாட்டில் உரையாட எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று பிரதமர் தெரிவித்தார்.

***