Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச யோகா தினத்தையொட்டி, லக்னோவில் நடைபெற்ற மாபெரும் யோகாசன நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி பங்கேற்பு

சர்வதேச யோகா தினம்-2017-யையொட்டி, லக்னோவில் இன்று நடைபெற்ற மாபெரும் யோகாசன நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.

லக்னோ நகரில் தொடர் மழை பெய்தபோதிலும், ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்ட மக்கள் மத்தியில் பேசிய பிரதமர், இந்தியா முழுவதும் யோகா தினத்தையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ள மக்கள் அனைவருக்கும் லக்னோ-விலிருந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

தற்போது, பல்வேறு மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக யோகா மாறியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இந்தியாவுக்கு வெளியிலும் யோகா மிகவும் பிரபலமாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், உலகை இந்தியாவுடன் யோகா இணைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு யோகா நிறுவனங்கள் சிறப்பான வடிவத்தைப் பெற்றுள்ளதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். நமக்கு உடல் தகுதியுடன், உடல் ஆரோக்கியமும் முக்கியம் என்று தெரிவித்த பிரதமர், உடல் ஆரோக்கியத்தை அடைவதற்கான வழியாக யோகா இருப்பதாக தெரிவித்தார்.

ஒவ்வொருவரும், தங்களது வாழ்க்கையின் ஓர் அங்கமாக யோகா பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். யோகா என்பது சுகாதார காப்பீடு என்றும், இந்தப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு அதிக செலவு பிடிக்காது என்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார்.

முன்னதாக, லக்னோவுக்கு பிரதமரை வரவேற்ற உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், யோகா என்பது நமது பாரம்பரியத்தின் அங்கம் என்றும், இது நம்மை ஒருங்கிணைப்பதாகவும் தெரிவித்தார்.

*****