Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச யோகா தினம் 2026-ஐ உலகளாவிய கொண்டாட்டமாக மாற்றியதற்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்


சர்வதேச யோகா தினம் 2026-ஐ உலகளாவிய கொண்டாட்டமாக மாற்றியதற்காக, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

நலவாழ்வு, சிறந்த ஆரோக்கியத்திற்கான பொதுவான முயற்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, அனைத்துத் தரப்பு மக்களையும் யோகா ஒருங்கிணைப்பதை காண்பது ஊக்கமளிப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.

இந்த நாள் எதிர்காலத்தில் தங்களது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக யோகாவை கடைப்பிடிக்க  மேலும் பலருக்கு உத்வேகம் அளிக்கும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;

“உலகம் முழுவதும் நினைவுகூரக்கூடிய யோகா தினம்!

சர்வதேச யோகா தினம் 2026- உண்மையில் உலகளாவிய கொண்டாட்டமாக மாற்றியதற்காக, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு நன்றி.

நலவாழ்வு, சிறந்த ஆரோக்கியத்திற்கான பொதுவான முயற்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, அனைத்துத் தரப்பு மக்களையும் யோகா ஒருங்கிணைப்பதை காண்பது ஊக்கமளிக்கிறது.

இந்த நாள் எதிர்காலத்தில் தங்களது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக யோகாவை கடைப்பிடிக்க  மேலும் பலருக்கு உத்வேகம் அளிக்கட்டும்.”

***

Release ID:  2276375

SS/IR/LDN/KR