Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனத்தின் 75வது ஆண்டு தினத்தை ஒட்டி, அதன் பவளவிழா நிகழ்ச்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்.

சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனத்தின் 75வது ஆண்டு தினத்தை ஒட்டி, அதன் பவளவிழா நிகழ்ச்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்.

சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனத்தின் 75வது ஆண்டு தினத்தை ஒட்டி, அதன் பவளவிழா நிகழ்ச்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்.


சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனத்தின் பல்வேறு செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கண்காட்சியை பிரதமர் பார்வையிட்டார். சில மருத்துவ மற்றும் நறுமண மூலிகை வகைகளை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஐதராபாத், கடலூர், ஜம்மு, ஜோர்ஹாட், பாலம்பூர் ஆகிய ஐந்து வெவ்வேறு நகரங்களில் இருந்து பங்கேற்ற விவசாயிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நமது ஜனநாயகத்தின் அடையாளச் சின்னமாகக் கருதப்படும், அழியாத மையில் தொடங்கி, வாழ்வில் ஒவ்வொரு அங்கத்திலும் சி.எஸ்.ஐ.ஆர். அழிக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்திவிட்டது என்று கூறினார். தொழில்நுட்ப முன்னேற்றம், பயனாளிகளுக்கு சென்று சேருவதை உறுதி செய்வதற்காக, தொடர்புடையவர்களை உள்ளடக்கியதாக `தொழில்நுட்ப வணிகத்தை எளிதில் செய்வது’ எனும் ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்று சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனத்தை பிரதமர் கேட்டுக் கொண்டார்.

அறிவியல் தொழில்நுட்பத்தின் சாதகம் இல்லாமல் எந்தவொரு நாடும் வளர்ச்சி அடைய முடியாது என்ற உண்மைக்கு சாட்சிகளை வரலாறு உருவாக்கி வைத்துள்ளது என்றும் பிரதமர் கூறினார். சாமானிய மனிதருக்கு பலன்கள் கிடைக்கச் செய்வதில், வெற்றிகரமான தொழில்நுட்பமும் ஒரு பங்கு வகிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். கடந்த 75 ஆண்டுகளில் நாட்டிற்கு சி.எஸ்.ஐ.ஆர். அளித்துள்ள சேவைகளைப் பாராட்டிய பிரதமர், எதிர்காலத்தில் இந்த நிறுவனத்திடம் இருந்து இன்னும் அதிகமாக எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். தொழில்நுட்பத்தால் வழிநடத்தப்படும் இந்த நூற்றாண்டின் குடிமக்களை அறிவியலின் மூலம் இணைக்க வேண்டியது முக்கியம் என்றும் பிரதமர் கூறினார்.

சி.எஸ்.ஐ.ஆர். ஆய்வகங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் அளிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். நாட்டில் புதிய தொழில்முனைவோர்கள் உருவாவதில் சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனத்துக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். வேளாண்மை உற்பத்தியைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், `ஒவ்வொரு சொட்டு நீருக்கும், கூடுதல் பயிர்’ என்ற கொள்கையை தாம் எப்போதும் வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார். இப்போது கூடுதலாக “ஒவ்வொரு அங்குல நிலத்திலும், ஒரு கைப்பிடியளவு பயிர்கள்” என்பதையும் நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேடையில் இருந்து இறங்கி வந்த பிரதமர், விக்யான் பவனில் பார்வையாளர் பகுதியில் இருந்த பள்ளிக்கூட மாணவர்களுடன் கலந்துரையாடினார்.