Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சீனாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதினை சந்தித்தார்

சீனாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதினை சந்தித்தார்


சீனாவில் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்கு இடையே பிரதமர்  திரு நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதினை இன்று (01.09.2025) சந்தித்துப் பேசினார். பொருளாதாரம், நிதி, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.  இத்துறைகளில்  இருதரப்பு உறவுகளில் நீடித்த வளர்ச்சிக் குறித்து, அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.

உக்ரைன் குறித்த சமீபத்திய நிகழ்வுகள் உள்ளிட்ட உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். உக்ரைனில் நிலவும் மோதல்களைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய முயற்சிகளுக்கு பிரதமர் ஆதரவு தெரிவித்தார். மேலும், மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து நீடித்த அமைதியை நிலவச் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையேயான சிறப்புமிக்க மற்றும் முன்னுரிமை அடிப்படையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கு இருநாட்டுத் தலைவர்களும் தங்களது ஆதரவை உறுதிப்படுத்தினார்கள். இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள 23-வது ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ள அதிபர் திரு புதினை வரவேற்க தாம் ஆவலுடன் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

***

(Release ID: 2162599)

AD/IR/KPG/KR