Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுதந்திரப் போராட்ட வீரர் திரு பிங்காலி வெங்கையாவின் 150-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மரியாதை செலுத்தினார்


சுதந்திரப் போராட்ட வீரர் திரு பிங்காலி வெங்கையாவின் 150-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

நாட்டிற்கு மூவண்ணக் கொடியை வழங்கியதில் திரு பிங்காலி வெங்கையா ஆற்றிய விலைமதிப்பற்ற பங்கை நினைவுகூர்ந்த பிரதமர், தேசப்பற்றுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் நாட்டிற்குச் சேவையாற்ற மக்களை அவரது முயற்சிகள் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

“திரு பிங்காலி வெங்கையாவின் 150-வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நம் நாட்டிற்கு மூவண்ணக் கொடியை வழங்கியதில் அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புக்காக அவர் நினைவுகூரப்படுகிறார். தேசப்பற்றுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் நாட்டிற்குச் சேவையாற்ற, அவரது முயற்சிகள் என்றும் மக்களுக்கு ஊக்கமளிக்கட்டும்.

மூவண்ணக் கொடி, ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் அளப்பரிய பெருமிதத்தால் நிரப்புவதுடன், தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபட நம்மை ஊக்குவிக்கிறது.”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293516&reg=3&lang=1                 

***

TV/BR/SE