பி.எம்.இந்தியா
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
நாடு தனது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், நாடு முழுவதிலும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து, குடியரசு துணைத்தலைவர், அந்தமான் – நிக்கோபார் தீவுகளுக்கு மேற்கொண்ட பயணத்தை அந்தக் கட்டுரை நினைவு கூர்வதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அமிர்த காலத்தில், 2047-ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்குத் தங்களை அர்ப்பணித்து, தேசத்தின் முன்னேற்றத்துக்கும் செழிப்புக்கும் ஒன்றிணைந்து செயல்படுமாறு அந்தக் கட்டுரை மக்களை வலியுறுத்துகிறது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“நாடு தனது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், நாடு முழுவதிலும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களை நினைவுகூர்ந்து, தாம் அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்குச் சென்றதையும் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்த அமிர்த காலத்தில், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைக்கத் தங்களை அர்ப்பணித்து, தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் செழிப்புக்காகவும் ஒன்றிணைந்து செயல்படுமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.”
****
(Release ID: 2299917)
SS/PLM/RJ
As India celebrates its 80th Independence Day, Honourable @VPIndia Thiru @CPR_VP recalls his visit to the Andaman and Nicobar Islands, remembering the sacrifices of freedom fighters from across the country.
— PMO India (@PMOIndia) August 15, 2026
He calls upon people to dedicate themselves to building a Viksit Bharat… https://t.co/EL1lWi4HBJ