பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.08.2026) சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்குத் தமது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த தேசிய விழா, காலனி ஆதிக்கத்திற்கு முடிவுகட்டிய நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளவற்ற துணிச்சல், அயராத போராட்டம், இணையற்ற அர்ப்பணிப்பு ஆகியவற்றை நினைவூட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் நோக்கங்கள் நமக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்க நாம் கூட்டாகப் பாடுபடும் வேளையில், மக்கள் அவர்களின் லட்சியங்களை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
140 கோடி இந்தியர்களின் ஆற்றலால், நமது தேசம் பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது என்று திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வளர்ச்சிப் பயணம் வரும் காலங்களில் இன்னும் அதிக வேகத்தில் தொடர்ந்து முன்னேறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
தங்கள் துணிச்சல், தியாகம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் காலனி ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்த எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை நாம் நன்றியுடன் நினைவுகூர்கிறோம். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்படும் இவ்வேளையில், அவர்களின் லட்சியங்கள் நமக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.
140 கோடி இந்தியர்களின் ஆற்றலால், நமது நாடு பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. வரும் காலங்களில் இந்தப் பயணம் இன்னும் அதிக வேகத்தில் முன்னேறட்டும்.”
***
(Release ID: 2299725)
SS/PLM/RJ
Warm greetings on the occasion of Independence Day.
— Narendra Modi (@narendramodi) August 15, 2026
We remember with gratitude the countless freedom fighters whose courage, sacrifice and unwavering commitment ensured the end of colonial rule. Their dreams continue to inspire us as we work together to build a Viksit Bharat.…