பி.எம்.இந்தியா
சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை பலப்படுத்திக் கொள்வதற்கான இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகமும், மாலத்தீவுகள் நாட்டின் சுற்றுலா அமைச்சகமும் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை முன் தேதியிட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
மாலத்தீவுகள் உடன் செய்து கொண்டுள்ள இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் முக்கிய ஆதார சந்தையில் இருந்து வருகையை அதிகரிக்க முக்கியமாக இருக்கும். சமீப ஆண்டுகளால் மாலத்தீவுகள் இந்தியாவுக்கு ஒரு முக்கிய சுற்றுலாவை உருவாக்கும் சந்தையாக உருவெடுத்துள்ளது.
நோக்கங்கள் :
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்கள் :
அ. சுற்றுலா துறையில் இரு தரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்
ஆ. சுற்றுலா தொடர்பான தகவல்கள் மற்றும் தரவுகளை பகிர்ந்து கொள்ளுதல்
இ. ஓட்டல்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் உள்ளிட்ட சுற்றுலா சம்பந்தப்பட்டவர்கள் இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவித்தல்
ஈ மனித வள மேம்பாட்டில் ஒத்துழைப்புக்கான பரிவர்த்தனை நிகழ்ச்சிகளை ஏற்படுத்துதல்
உ. சுற்றுலா மற்றும் உபசரிப்புத் துறைகளில் முதலீடுகளை செய்தல்
ஊ. இரு வழி சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், ஊடகம் மற்றும் கருத்துருவாக்கம் செய்பவர்களின் விஜயங்களை பரிமாறிக் கொள்வது
எ. மேம்பாடு, சந்தைப்படுத்துதல், இடம் மேம்பாடு மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல்
ஏ. சுற்றுலா பயணியர் கண்காட்சிகளில் பங்கேற்பது
ஐ. மதிப்பிற்குரிய மற்றும் நீடித்த சுற்றுலாவை மேம்படுத்துதல்