பி.எம்.இந்தியா
சூரத், டாமன் ஆகிய பகுதிகளுக்கு தாம் அண்மையில் மேற்கொண்ட பயணங்களின் முக்கிய அம்சங்களை பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, சூரத் மக்களுடன் இருந்த தருணங்கள் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். உற்சாகம் நிறைந்த மக்கள் நிறைந்திருக்கும் இந்த நகரத்திலிருந்து, இந்தியாவை வலிமையான, தன்னிறைவு பெற்ற நாடாக உருவெடுக்கச் செய்வதற்கான உறுதியான நிலைப்பாட்டை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஒன்றிணைந்து மீண்டும் வலியுறுத்தியதாகப் பிரதமர் கூறினார்.
டாமனில் தொடங்கி வைக்கப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்த உதவிடும் என்பதை திரு. மோடி சுட்டிக் காட்டினார். தனது பயணத்தின் போது நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் முக்கிய அம்சங்களையும்,அது தொடர்பான காட்சிகளையும் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், தொடர்ச்சியாக வெளியிட்டுள்ள பதிவுகள் வாயிலாக பிரதமர் கூறியிருப்பதாவது:
“நேற்று சூரத் மக்களுடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. உற்சாகம் நிறைந்த மக்கள் நிறைந்துள்ள இந்த நகரத்திலிருந்து, இந்தியாவை வலிமையான, தன்னிறைவு பெற்ற நாடாக உருவெடுக்கச் செய்வதற்கான நமது உறுதியான நிலைப்பாட்டை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் வலியுறுத்தினோம்.”
“நேற்று தொடங்கி வைக்கப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள், டாமன் யூனியன் பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்தும். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளின் சில முக்கிய அம்சங்கள் இங்கே…”
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269743®=3&lang=1
(Release ID: 2269743)
****
TV/SV/SH
It was wonderful being among the people of Surat yesterday. From this vibrant city, we collectively reiterated our commitment to making India strong and self-reliant. pic.twitter.com/VtE67tYj02
— Narendra Modi (@narendramodi) June 6, 2026
The development works inaugurated yesterday will substantially improve people's lives in Daman. Here are some highlights from the programmes yesterday... pic.twitter.com/Zrjkylk3ID
— Narendra Modi (@narendramodi) June 6, 2026