Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சூரத் நகரில் நடைபெற்ற தீவிபத்து குறித்து பிரதமர் கவலை தெரிவித்தார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி, சூரத் நகரில் நடைபெற்ற தீவிபத்து குறித்த தனது கவலையைத் தெரிவித்தார். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு குஜராத் மாநில அரசையும் உள்ளூர் அதிகாரிகளையும் அவர் கேட்டுக் கொண்டார்.

“சூரத் நகரில் நடைபெற்ற தீவிபத்து குறித்து மிகவும் கவலையுற்றேன். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நினைத்து கவலைப்படுகிறேன். இதில் காயமுற்றோர் விரைவாக குணமடைய வேண்டும். இதில் பாதிக்கப்பட்டோருக்கு அனைத்து வகையான உதவிகளையும் செய்யுமாறு குஜராத் மாநில அரசையும் உள்ளூர் அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டுள்ளேன்.” என பிரதமர் இச்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

********