Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சென்னை கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல்


தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தங்களைத்  தெரிவித்துள்ளார்.  இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமெனப் பிரார்த்திப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

பிரதமர் தனது எக்ஸ் சமூக ஊடக பதிவில், கூறியிருப்பதாவது:

“சென்னையில் கட்டிடம் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்து வருத்தமளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi”

Release ID: (2173390)

***

SS/SE/SH