பி.எம்.இந்தியா
செயலாளர்கள் ஆலோசனைகளையும், புதிய யோசனைகளையும் கூற வேண்டும் என்ற பிரதமரின் திட்டத்திற்கிணங்க, செயலாளர்களின் முதல் குழு (மொத்தம் எட்டு குழுக்கள் உள்ளன) அரசு நிர்வாகத்தில் பல்வேறு மாற்றத்திற்கான யோசனைகளை தெரிவித்தன. எரிசக்தி சேமிப்பு மற்றும் எரிசக்தி திறன் ஆகியவை குறித்து பிரதமரிடம் யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.
பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் திரு. ராஜ்நாத் சிங், திரு அருண் ஜேட்லி, திருமதி சுஷ்மா ஸ்வராஜ், நித்தி ஆயோக் துணைத் தலைவர் திரு அர்விந்த் பனாகரியா மற்றும் அனைத்துத் துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின்போது, பிரதமர் மற்றும் பார்வையாளர்கள் அந்த ஆலோசனைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
ஆலோசனைகள் மற்றும் காணொளி காட்சியை பாராட்டிய பிரதமர், அவர் நினைத்ததைப் போலவே ஆலோசனைகள் வந்துள்ளதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் கூறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கேள்விகளுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.
Today a group of secretaries shared their ideas & suggestions on energy conservation & efficiency. https://t.co/UA87U6nQvP
— Narendra Modi (@narendramodi) January 12, 2016