Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

செலாவணி முறி (திருத்தம்) அவசரச் சட்டம் – 2015 ஐ பிறப்பிக்க ஒப்புதல்


செலாவணி முறி (திருத்தம்) அவசரச் சட்டம் – 2015ஐ பிறப்பிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

1881ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இச்சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டிருக்கும் திருத்தங்கள் இச்சட்டத்தின் 138வது பிரிவுக்கு பொருந்தும். அதன்படி வழக்குகளை தொடர இருக்கும் அதிகார வரம்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

காசோலைகள் திருப்பி அனுப்பப்படுவது குறித்த பிரச்சினைகளின் அதிகார வரம்புகள் முக்கியமானதாக உள்ளன. ஏனெனில், ஒரு காசோலை நிதி தொடர்புடைய ஆவணம். இதன்படி வர்த்தகத்திற்காக வங்கிகள் உட்பட கடன் அளிக்கும் நிதி நிறுவனங்கள் காசோலைகள் திருப்பி அனுப்பப்படுவதால் கடன் அளிப்பதை நிறுத்தாமல் தொடரலாம்.

அத்தியாவசிய பணிகளுக்கான சட்டத்தின் 138வது பிரிவின்கீழ் காசோலைகளை திருப்பி அனுப்பப்பட்டால் வழக்குகள் நடத்தப்படும் இடம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரிவை அரசு திருத்த உத்தேசித்துள்ளது.

காசோலைகள் திருப்பி அனுப்பப்படும் போது அதைப் பற்றி கொடுக்கப்படும் புகார்களின் மீது உள்ள வழக்குகள் நடத்தப்படும் இடம் குறித்து திருத்தங்கள் மேற்கொள்வதால் நியாயமான முறையில் வழக்குகள் நடத்தப்பட உறுதி செய்யப்படும். இந்த அவசரச் சட்டம் மசோதாவைப் போன்றே இருக்கும். இந்தச் சட்டத்தின் 138வது பிரிவில் உள்ள அதிகார வரம்பு ஒரே மாதிரியாக இருக்கும். அதில் இரண்டு சூழ்நிலைகளில் வேறுபடும். (i) ஒரு கணக்கின் மூலமாக அந்த காசோலை அளிக்கப்படுவது. (ii) ஒரு கணக்கின் மூலமாக அல்லது நேரடியாகவோ அந்த காசோலையை அந்த வங்கியில் அளிப்பது. ஆகிய இரண்டைத் தவிர மற்றவை அவசரச் சட்டத்தில் இடம் பெறும்.

பின்னணி:

செலாவணி சட்டத்தின் 138வது பிரிவு காசோலையை அளித்தவர்களிடம் கணக்கில் போதிய அளவு பணம் இல்லாமல் திருப்பி அனுப்பப்படுவது பற்றியதாகும். இந்தச் சட்டத்தின்படி காசோலைகளை வர்த்தகப் பணிகளுக்காக பயன்படுத்துவதால் அதன் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 138வது பிரிவில் காசோலைகளை பெறுபவர்கள் காசோலை எங்கு பெறப்பட்டதோ அந்த இடத்தில் தான் வழக்குகளை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டதால் பல நிதி நிறுவனங்களும், தொழில்துறை அமைப்புகளும் பல்வேறு நடைமுறை இடர்பாடுகளை வெளிப்படுத்தின. காசோலையை பெற்றவர் இச்சட்டத்தின் 138வது பிரிவின் கீழ் வழக்குகளை நடத்துவதிலும் இடர்பாடுகள் ஏற்பட்டன. ஆகவே ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்தன. 2015ஆம் ஆண்டு செலாவணி முறி (“திருத்தம்”) மசோதாவை மக்களவையில் 2015ஆம் ஆண்டு மே 6 ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது. 2015ஆம் ஆண்டு மே 13 ஆம் நாள் மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவை 2015ஆம் ஆண்டு மே 13 ஆம் நாள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஆகவே, அங்கு இந்த மசோதாக விவாதத்திக்கப்படவில்லை. மசோதாவும் அங்கு நிறைவேற்றப்படவிடல்லை.

இந்த மசோதாவின்படி காசோலைகளை பெறுபவர்கள் அந்த இடத்திலேயே எந்த வங்கியில் அந்த காசோலையை வழங்குகிறாரோ அந்த இடத்திலேயே புகார்களையும் அளித்து வழக்குகளையும் தொடரலாம். 138வது பிரிவின் கீழ் தொடரப்பட்ட மேலும் புகார்கள் அதே நீதிமன்றத்தில் தொடரலாம்.

காசோலையை வழங்கியவர் மீது மேலும் பல வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் இருந்தால் இதை அங்கு விசாரிக்கும் நீதிமன்றத்தில் கொண்டு வரலாம்.

•••••••