பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சோமநாதர் ஆலயத்திற்குச் சென்று, புனரமைக்கப்பட்ட அக்கோயில் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் நிகழ்வில் தாம் ஆசி பெற்ற உணர்வை வெளிப்படுத்தினார்.
புனரமைக்கப்பட்ட சோமநாதர் ஆலயத் திறப்பு விழாவின் 75-வது ஆண்டையொட்டி, புனித சோமநாதர் ஆலயத்திற்கு வருகை தந்தபோது தமக்கு ஏற்பட்ட தெய்வீக அனுபவத்தைப் பிரதமர் குறிப்பிட்டார். கோயில் பாதையில் சோமநாதப் பெருமானின் பக்தர்கள் காட்டிய அளவற்ற ஆர்வத்தையும் உற்சாகத்தையும் கண்டபோது, தான் நெகிழ்ந்துபோய் உணர்ச்சிவசப்பட்டதாக திரு மோடி எடுத்துரைத்தார். புனரமைக்கப்பட்ட ஆலயத் திறப்பு விழாவின்போது இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் அனுபவம் கொண்ட அதே நிலையில் இன்று தாமும் இருப்பதாக அவர் கூறினார். மேலும், சோமநாதர் அமிர்தப் பெருவிழாவின் பக்திமயமான சூழல் எங்கும் ஓர் அற்புதமான ஆற்றலைப் பரப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சோம்நாத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பக்தியை அனுபவிக்க முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். புனரமைக்கப்பட்ட கோயில் திறக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில் ஏராளமான மக்கள் ஒன்று கூடியுள்ளதை வரவேற்ற திரு மோடி, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இந்தியாவின் நாகரிகப் பயணத்தில் ஒரு மைல்கல் என்று தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தின் தொடர்ச்சியான பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“ஜெய் சோம்நாத்! புனரமைக்கப்பட்ட கோயில் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் இந்த வேளையில், இங்கு இருப்பதற்குப் பாக்கியம் செய்ததாக உணர்கிறேன்.”
“சோம்நாத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பக்தியை அனுபவிக்க முடியும். புனரமைக்கப்பட்ட கோயில் திறக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில் ஏராளமான மக்கள் இங்கு ஒன்று கூடியுள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இந்தியாவின் நாகரிகப் பயணத்தில் ஒரு மைல்கல்லாகும்.
(Release ID: 2259718)
***
SS/SMB/SH
Jai Somnath! Feeling blessed to be here, when we are marking 75 years since the rebuilt Temple opened its doors for devotees. pic.twitter.com/gFumT80Qva
— Narendra Modi (@narendramodi) May 11, 2026
पुनर्निर्मित सोमनाथ मंदिर के लोकार्पण की 75वीं वर्षगांठ पर पावनधाम सोमनाथ आकर दिव्य अनुभूति हुई है। इस अवसर पर मंदिर मार्ग पर भगवान सोमनाथ के भक्तों के जोश और प्रचंड उत्साह को देखकर मन अभिभूत और भावविभोर है! मैं आज यहां उस क्षण को जी रहा हूं, जिसका अनुभव भारत के प्रथम राष्ट्रपति… pic.twitter.com/nzzOk94BQJ
— Narendra Modi (@narendramodi) May 11, 2026
At Somnath, one can experience Bhakti in every corner. Countless people have come together to mark 75 years since the rebuilt Temple opened its doors to devotees. That day was indeed a milestone in the civilisational journey of Bharat. pic.twitter.com/wvNbmAN5V8
— Narendra Modi (@narendramodi) May 11, 2026