Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜம்மு காஷ்மீரில் பிரதமர்

ஜம்மு காஷ்மீரில் பிரதமர்

ஜம்மு காஷ்மீரில் பிரதமர்

ஜம்மு காஷ்மீரில் பிரதமர்

ஜம்மு காஷ்மீரில் பிரதமர்

ஜம்மு காஷ்மீரில் பிரதமர்

ஜம்மு காஷ்மீரில் பிரதமர்

ஜம்மு காஷ்மீரில் பிரதமர்

ஜம்மு காஷ்மீரில் பிரதமர்

ஜம்மு காஷ்மீரில் பிரதமர்

ஜம்மு காஷ்மீரில் பிரதமர்

ஜம்மு காஷ்மீரில் பிரதமர்

ஜம்மு காஷ்மீரில் பிரதமர்

ஜம்மு காஷ்மீரில் பிரதமர்

ஜம்மு காஷ்மீரில் பிரதமர்


ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு ரூ. 80,000 மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அறிவித்தார். ஸ்ரீநகரில் உள்ள ஷேர் – இ – காஷ்மீர் அரங்கத்தில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாயின் காஷ்மீரியத், ஜம்உரியத் (ஜனநாயகம்), இன்சானியத் ஆகியவற்றிக்கான செய்தியை நினைவு கூர்ந்தார்.

காஷ்மீரியத் இல்லாமல் இந்தியா நிறைவு பெறாது என்று குறிப்பிட்ட பிரதமர் இந்தியாவின் சூஃபி பாரம்பரியத்தையும் நினைவு கூர்ந்தார்.

ஜனநாயகத்தில் நம்பிக்கைக் கொண்டிருப்பதற்காக அம்மாநில மக்களை பாராட்டிய பிரதமர் ஜம்மு காஷ்மீரின் முன்னேற்றம் இன்சானியத் அடிப்படையில் மட்டுமே இருக்க முடியும் என்றார்.

அனைவரும் ஒன்றுபடுவோம், அனைவரும் உயர்வோம் என்பதற்காகவே தமது அரசு பாடுபட்டு வருவதாகவும், இதன் அடிப்படையில் வளர்ச்சி நாட்டின் அனைத்து பகுதிகளையும் சென்றடைய வேண்டும் என்று அவர் கூறினார். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே பணம் சேமித்து வந்த அந்த நாளைய நிலமை இப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு திரும்ப வேண்டும் என்றார் அவர். சுற்றுலா தவிர, பஷ்மினா, குங்குமப்பூ ஆகியத் துறைகளுக்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

450 மெகாவாட் திறன் கொண்ட பக்ளிஹர் நீர்மின் சக்தி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் துவக்கி வைத்தார். உதம்பூர்-ராம்பன், ராம்பன்-பானிஹால் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிப் பாதையாக மாற்றி அமைக்கும் திட்டத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

புதுப்பிக்கக்கூடிய மின்சார உற்பத்திக்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர் புதுப்பிக்கக்கூடிய மின்சார உற்பத்திக்கு மிகப்பெரிய அளவான 175 கிகாவாட் என்ற குறியளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஸ்ரீநகரில் தாம் அறிவித்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான ரூ.80,000 கோடி உதவித் திட்டம் அந்த மாநிலத்திற்கு புதிய வலு சேர்க்கும் என்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

*****