Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜெர்மனி வெளியுறவுத் துறையும் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையும் இணைந்து ஜெர்மன் மொழியை கூடுதல் வெளிநாட்டு மொழியாக இந்தியாவில் வளர்ப்பதற்கும், நவீன இந்திய மொழிகளை ஜெர்மனியில் வளர்ப்பதற்குமான கூட்டு ஒப்பந்தம்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையும் ஜெயர்மன் வெளியுறவுத் துறையும் இணைந்து, இந்தியாவில் ஜெர்மன் மொழியை கூடுதல் வெளிநாட்டு மொழியாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மூலமாக தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் வளர்ப்பதற்கும், ஜெர்மனியில் நவீன இந்திய மொழிகளை வளர்ப்பதற்குமான கூட்டு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கியது.

இந்த கூட்டு ஒப்பந்தம், இந்தியா ஜெர்மனி ஆகிய இருநாட்டு உறவுகளை மேலும் வளர்ப்பதற்கும், இரு நாட்டில் உள்ள விதிகள், சட்டங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப, கல்வியை இருநாட்டில் வளர்ப்பதற்கும் உதவும்.

பின்னணி

செப்டம்பர் 2011ல், இந்தியாவில் கேந்திரிய வித்யாலயா சங்கதன் மற்றும் ஜெர்மனியின் மேக்ஸ் முல்லர் பவன் கதே இன்ஸ்ட்டியூட் ஆகியவை இணைந்து, கேந்திரிய வித்யாலயாக்களில் ஜெர்மன் மொழியை பயிற்றுவிப்பதற்கு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் செப்டம்பர் 2014ல் காலாவதியானது. ஆனால் தேசிய கல்விக் கொள்கை மற்றும் தேசிய கல்வித் திட்டத்தில் இருந்த மூன்று மொழி கொள்கைக்கும், இந்த ஒப்பந்தத்துக்கும் சில முரண்பாடுகள் இருந்ததால், மேற்கொண்டு இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் இருந்தது.

கேந்திரிய வித்யாலயா கவர்னர்கள் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை நடத்திய விவாதத்தின் அடிப்படையில் ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கேந்திரிய வித்யாலயா சங்காத்தன் மற்றும் மேக்ஸ் முல்லர் பவன் கதே இன்ஸ்ட்டியூட் இடையே கையெழுத்தாக இருந்தது. ஆனால், நவீன இந்திய மொழிகளை ஜெர்மனியில் பயிற்றுவிப்பதற்கு கதே இன்ஸ்ட்டியூட் ஒப்புதல் அளிக்க முடியாது என்பதால், அரசு அளவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை ஏப்ரல் 5ம் தேதி பரிந்துரை செய்தது.

இந்திய பிரதமர் மற்றும் ஜெர்மன் வேந்தர் பெர்லினில் 2015 ஏப்ரல் 14ல் வெளியிட்ட கூட்டறிக்கையில் இரு நாடுகளிலும், இந்த இரு கல்வித் திட்டங்களுக்கும் ஆதரவு தருவது என்றும், இந்தியா மற்றும் ஜெர்மனியில், அந்தந்த நாடுகளின் தேசிய கொள்கையின்படி, உள்ள இளைஞர்களின் மொழி அறிவை வளர்ப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இந்திய அரசின் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் ஜெர்மன் அரசின் வெளியுறவுத் துறை இரண்டும் இணைந்து இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கையின்படி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழியை கூடுதல் மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்றும் நவீன இந்திய மொழிகளை ஜெர்மனியில் பயற்றுவிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக ஒரு புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று வெளியுறவுத் துறை பரிந்துரை செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தும் முறைகள் குறித்து, கேந்திரிய வித்யாலயா சங்கத்தன் மற்றும் மேக்ஸ் முல்லர் பவன் / கதே இன்ஸ்ட்டியூட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

ஜெர்மனியில் நவீன இந்திய மொழிகளை பயிற்றுவிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை, இது தொடர்பான இரு நாடுகளிலும் உள்ள கல்வி நிலையங்கள் கண்டறிந்து ஒப்பந்தந்தங்களில் கையெழுத்திடும். ஜெர்மனியில் உள்ள இந்தியத் தூதரகம் ஜெர்மன் அரசின் கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர்களின் நிலைக்குழுவைத் தொடர்பு கொண்டு, இதை மேற்கொள்வதற்கான கல்வி நிலையங்களைக் கண்டறியும். இந்த கூட்டு ஒப்பந்தத்தை செயல்படுத்தும் இரு நாடுகளில் உள்ள கல்வி நிலையங்கள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்.