Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் அம்பேத்கரின் 125வது பிறந்த தினம், பாபா சாஹேப் பிறந்த இடத்தில் பிரதமர் மரியாதை

டாக்டர் அம்பேத்கரின் 125வது பிறந்த தினம், பாபா சாஹேப் பிறந்த இடத்தில் பிரதமர் மரியாதை

டாக்டர் அம்பேத்கரின் 125வது பிறந்த தினம், பாபா சாஹேப் பிறந்த இடத்தில் பிரதமர் மரியாதை


இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு, மோவ்வில் உள்ள அவரது பிறந்த இடத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மலரஞ்சலி செய்து மரியாதை செலுத்தினார்.

மோவ்வில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் கிராமத்தில் இருந்து பாரத் உதய் என்னும் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்தப் புனிதமான தினத்தில் மோவ்வில் இருப்பதைப் பெருமிதமாக பிரதமர் தெரிவித்தார். சமுதாயத்தில் உள்ள அநீதிகளுக்கு எதிராக போராடியவர் டாக்டர் அம்பேத்கர் என அவர் குறிப்பிட்டார். அவரது போராட்டம் சமநிலை மற்றும் கண்ணியத்திற்கானது என்றும் பிரதமர் கூறினார்.

2016 ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 24 வரை நடைபெறும் கிராமத்திலிருந்து பாரத் உதய் இயக்கம், கிராமங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட் விவசாயிகள் மற்றும் கிராமங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். வளர்ச்சிக்கான முயற்சிகள் ஊரக மேம்பாட்டில் கண்ணோட்டம் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு மேற்கொண்டு வரும் சில வளர்ச்சிக்கான மேம்பாட்டு முயற்சிகள் பற்றி குறிப்பிட்ட அவர், 18,000 மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு மின்சாரம் 1000 நாட்களுக்குள் அளிக்கப்பட்டு வருகிறது என்றும், இந்த இலக்கை நோக்கிய முன்னேற்றம் குறித்த தகவல்களை கர்வ் என்ற செயலி மூலம் மக்கள் பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.

கிராமப்புறங்களில் டிஜிட்டல் இணைப்பு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்பட வேண்டும் என்று கூறிய பிரதமர், கிராமப்புற மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் இந்த உயர்வு இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் என்றார். பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மேலும் வலிமையானதாகவும் துடிப்பானதாகவும் ஆக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.