Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு நாளில் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்


முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு நாளில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஒரு ஊக்கமளிக்கும் தொலைநோக்கு சிந்தனையாளர், அதிசிறந்த விஞ்ஞானி, நம்பிக்கையூட்டும் வழிகாட்டி மற்றும் சிறந்த தேசபக்தராக நினைவுகூரப்படுகிறார் என்று திரு மோடி கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிடுள்ள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

“நமது அன்புக்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலியை செலுத்துகிறேன். அவர் ஒரு ஊக்கமளிக்கும் தொலைநோக்கு சிந்தனையாளர், அதிசிறந்த விஞ்ஞானி, நம்பிக்கையூட்டும் வழிகாட்டி மற்றும் சிறந்த தேசபக்தராக நினைவுகூரப்படுகிறார். நமது தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பு முன்மாதிரியானது. வளர்ச்சியடைந்த மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்க பங்களிக்கும் வகையில் இந்திய இளைஞர்களுக்கு அவரது எண்ணங்கள் ஊக்கமளிக்கின்றன.”

***

(Release ID: 2148976)

AD/SM/RJ