Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி


இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாதின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“மகாத்மா காந்தியால் தூண்டப்பட்ட டாக்டர் ராஜேந்திர பிரசாத், இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் தீவிரப் பங்காற்றினார். அடிமட்ட அளவிலான இயக்கங்களான ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றில் அவர் பங்கேற்றார். இந்திய அரசமைப்புச் சபையில் அதன் தலைவராக பெரும் ஆளுமையை வழங்கினார்.

இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவராக அவரது தலைமையும் வழிகாட்டுதலும் இந்த தேசத்திற்கு அதன் தொடக்க ஆண்டுகளில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
டாக்டர் ராஜேந்திர பிரசாதின் குறிப்பிடத்தக்க சேவை பல தலைமுறை இந்தியர்களுக்கும் எழுச்சியூட்டுவதாக உள்ளது.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***