Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினத்தில் பிரதமர் அவரை நினைவுகூர்ந்து சமஸ்கிருத சுபாஷிதத்தை பகிர்ந்துள்ளார்


டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினத்தையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டைக் கட்டமைப்பதில் அவருடைய பெரும் பங்களிப்பு குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சிக்காக தமது வாழ்வை அர்ப்பணித்த சிறந்த தேசபக்தராகவும், அறிஞராகவும், அரசியல் ஆளுமையாகவும் டாக்டர் முகர்ஜி திகழ்ந்தார் என்று பிரதமர் விவரித்துள்ளார். டாக்டர் முகர்ஜியின் அசைக்க முடியாத உறுதிப்பாடு, பொதுவாழ்க்கையில் துணிச்சல், தேச நலனுக்கான அர்ப்பணிப்பு ஆகியவை எதிர்கால தலைமுறையினருக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று திரு மோடி கூறியுள்ளார்.  டாக்டர் முகர்ஜியின் தியாகம் நாட்டின் நினைவில் அழியாத இடத்தை பிடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் முகர்ஜிக்கு மரியாதை செலுத்தியுள்ள பிரதமர், தமது முழு வாழ்க்கையையும் அவர் நாட்டிற்கும் சமூகத்திற்கும் தன்னலமற்ற சேவையாற்றி அர்ப்பணித்துள்ளதாக கூறியுள்ளார். டாக்டர் முகர்ஜியின் ஆழமான சிந்தனைகளும் கொள்கைகளும் தாய்நாட்டிற்கு சேவையாற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று திரு மோடி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் பிரதமர் சமஸ்கிருத சுபாஷிதத்தையும் பகிர்ந்துள்ளார்;

அழியாமை என்பது செயல்கள்செல்வம், பரம்பரை ஆகியவற்றால் மட்டுமின்றி, தியாகம், உன்னத லட்சியங்களுக்கான முழுமையான அர்ப்பணிப்பின் மூலமே அடையப்படுவதாக  சுபாஷிதம் எடுத்துரைக்கிறது. தேசம்சமூகம், உண்மை ஆகியவற்றிற்காக தங்களது தனிப்பட்ட நலன்களைத் துறக்கக்கூடிய அந்த உன்னத ஆத்மாக்கள்காலத்திற்கு அப்பாற்பட்டு மக்களின் மனங்களில் அழியாதவர்களாக இருக்கிறார்கள்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;

“இந்தியாவின் வளர்ச்சிக்காக தமது வாழ்வை அர்ப்பணித்த சிறந்த தேசபக்தராகவும், அறிஞராகவும், அரசியல் ஆளுமையாகவும் திகழ்ந்த டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினத்தையொட்டி நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது அசைக்க முடியாத உறுதிப்பாடு, பொதுவாழ்க்கையில் துணிச்சல், தேச நலனுக்கான அர்ப்பணிப்பு ஆகியவை எதிர்கால தலைமுறையினருக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும். டாக்டர் முகர்ஜியின் தியாகம் நாட்டின் நினைவில் அழியாத இடத்தை பிடித்துள்ளது. அவர் தனது இறுதி காலம் வரை போற்றிப் பாதுகாத்த மாண்புகளின் வழிகாட்டுதலுடன்வலிமையான, வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதற்கான நமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.

***

Release ID:  2276998

SS/IR/LDN/SH