Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டெபிட் கார்டு / பீம் யூபிஐ / ஏஇபிஎஸ் மூலமாக ரூ.2000 -க்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கான எம்.டி.ஆர். கட்டணங்களுக்கு மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து டெபிட் கார்டு / பீம் யூ.பி.ஐ. / ஆதார் அட்டை சார்ந்த பட்டுவாடா சேவைகளுக்கு (AePS) பொருந்தக் கூடிய வணிகர் தள்ளுபடி கட்டணத்தை (MDR), ரூ.2000 வரையிலான மற்றும் ரூ.2000 தொகையும் உள்ளிட்ட மதிப்புகளுக்கான பரிவர்த்தனைகளுக்கான இரண்டு ஆண்டுகளுக்கு அரசே ஏற்றுக்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜனவரி 2018ல் இருந்து இந்தக் கட்டணத்தை வங்கிகளுக்கு அரசு திருப்பியளிக்கும்.

நிதிச் சேவைகள் துறையின் செயலாளர், மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் மற்றும் இந்திய தேசிய பட்டுவாடா கார்ப்பரேசனின் (NPCI) தலைமை செயல்பாட்டு அதிகாரி (CEO) ஆகியோரைக் கொண்ட ஒரு கமிட்டி, இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கான தொழில்முறையிலான செலவுகளை ஆய்வு செய்யும். திருப்பி அளிக்கும் தொகை அளவு அதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

இந்த ஒப்புதல் கிடைத்திருப்பதால், ரூ.2000 க்கும் குறைந்த மதிப்புள்ள அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் நுகர்வோர் மற்றும் வணிகருக்கு MDR என்ற வகையில் எந்தவிதமான கூடுதல் சுமையும் ஏற்படாது. இதனால் இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் பட்டுவாடா நடைமுறையை ஏற்றுக்கொள்ளும் போக்கு அதிகரிக்கும். பரிவர்த்தனை அளவில் பார்க்கும்போது, இதுபோன்ற பரிவர்த்தனைகள் கணிசமாக இருப்பதால், ரொக்கம் இல்லா பொருளாதாரத்தை நோக்கிய முயற்சிக்கு இது உதவியாக இருக்கும்.

ரூ.2000 மதிப்புக்கும் குறைந்த பரிவர்த்தனைகளுக்கான எம்.டி.ஆர். (MDR) தொகையை வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்தும் வகையில், 2018-19 நிதியாண்டுக்கு ரூ.1,050 கோடியும், 2019-20 ஆம் நிதியாண்டுக்கு ரூ.1,462 கோடியும் செலவினம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வணிகரின் விற்பனை முனையத்தில் பட்டுவாடா செய்யப்படும்போது, வங்கிக்கு வணிகர் MDR செலுத்த வேண்டியுள்ளது. இதைக் காரணம் காட்டி, டெபிட் கார்டுகள் வைத்திருந்தாலும் பலரும் ரொக்கமாகவே பணம் வழங்குகின்றனர். அதேபோல பீம் யூ.பி.ஐ.(BHIM UPI) மூலமாகவும், ஏஇபிஎஸ் (AePS) மூலமாகவும் வணிகர்களுக்கு அளிக்கும் பட்டுவாடாக்களுக்கு எம்.டி.ஆர். (MDR) விதிக்கப்படுகிறது

*****