பி.எம்.இந்தியா
மகாராஷ்டிராவின் தானேவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக பிரதமர் கூறியுள்ளார். இந்தத் துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
மகாராஷ்டிராவின் தானேவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளை அறிந்து வேதனை அடைந்தேன். இந்தத் துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்.”
***
(Release ID: 2292271)
SS/PLM/RJ/SH
Pained to hear about the loss of lives due to the collapse of a building in Thane, Maharashtra. My thoughts are with the bereaved families in this hour of grief. May the injured recover at the earliest.
— PMO India (@PMOIndia) July 31, 2026
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of…
महाराष्ट्रात ठाणे येथे इमारत कोसळून झालेल्या जीवितहानीच्या वृत्ताने अत्यंत दुःख झाले. या दुःखद प्रसंगात माझ्या सहवेदना शोकाकुल कुटुंबांसोबत आहेत. या दुर्घटनेतील जखमी लवकरात लवकर बरे होवोत हीच प्रार्थना.
— PMO India (@PMOIndia) July 31, 2026
या दुर्घटनेत मृत्यू झालेल्या व्यक्तींच्या कुटुंबियांना प्रधानमंत्री सहायता…