பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் துங்கபத்ரா எஃகு பொருட்கள் லிமிடெட் (TSPL) நிறுவனத்தை மூடும் CCEA முடிவை அமல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் அசையா சொத்துகளை விற்பது தொடர்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. TSPL-ன் நிலுவை கடன்களை பைசல் செய்த பிறகு, கம்பெனிகள் பதிவாளர் பட்டியலில் இருந்து இந்த நிறுவனத்தின் பெயரை நீக்கக் கோருவதற்கும் இது வகை செய்கிறது.
அலுவலர்கள் / தொழிலாளர்கள் மற்றும் கடனாளர்களின் நிலுவைகள் அனைத்தும் பைசல் செய்தபிறகு, இந்த நிறுவனத்தை மூடுவதற்கு டிசம்பர் 2015-ல் CCEA ஒப்புதல் அளித்தது நினைவுகூரத்தக்கது. MMH வளாகங்களை 20,000 சதுரமீ்ட்டர் நிலத்துடன் கர்நாடக அரசுக்கு மாற்றித் தருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஹோஸ்பேட்டில் உள்ள நிறுவனத்தின் 82.37 ஏக்கர் நிலத்தை, கர்நாடக மாநில வீட்டுவசதி வாரிய பயன்பாட்டுக்காக, கர்நாடக அரசுக்கு விற்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. கர்நாடக அரசு தர முன்வந்த ஏக்கருக்கு ரூ.66 லட்சம் என்ற விலையின் அடிப்படையில் இந்த நிலம் விற்கப்படுகிறது.
******