Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

துபாயில் 11.01.2018 அன்று அளிக்கப்பட்ட சமுதாய வரவேற்பில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

துபாயில் 11.01.2018 அன்று அளிக்கப்பட்ட சமுதாய வரவேற்பில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

துபாயில் 11.01.2018 அன்று அளிக்கப்பட்ட சமுதாய வரவேற்பில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

துபாயில் 11.01.2018 அன்று அளிக்கப்பட்ட சமுதாய வரவேற்பில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


உங்களை மீண்டும் ஒருமுறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது, எனக்குக் கிடைத்த பெரிய அதிர்ஷ்டமாகும். அபுதாபி பட்டத்து இளவரசர் 2016-ல் இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். 2017 ஆம் ஆண்டு எமது மிக முக்கியமான குடியரசு தின விழாவில் அவர் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். பல பத்தாண்டுகளுக்குப் பிறகு வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் ஆழமாகவும், விரிவாகவும், துடிப்புள்ளதாகவும் மாறியுள்ளன.

இன்று, வளைகுடா நாடுகளுடனான தமது உறவுகள் விற்போர்-வாங்குவோர் உறவுகளுடன் நின்றுவிடாமல், ஒரு பங்கேற்பு உறவாக மலர்ந்துள்ளது. இந்த மண்டலத்தின் மேம்பாட்டுப் பயணத்தில் வளைகுடா நாடுகளில் வசிக்கும் 30 லட்சத்திற்கும் கூடுதலான இந்தியர்கள் கூட்டாளிகளாக இருப்பது குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. வளைகுடா நாடுகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், எனது வணக்கத்தையும் உரித்தாக்குகிறேன்.

இந்தியாவிற்கு வெளியே 30 லட்சத்திற்கும் கூடுதலான இந்தியர்களுக்கு இரண்டாவது தாய் வீடாகப் போற்றும் வகையில் நல்ல சுற்றுச்சூழல் உங்களுக்கு உருவாக்கித்தரப்பட்டுள்ளது.

இந்திய சமுதாயத்தினர் உள்ளூர் மக்களின் கனவுகளுடன் கலந்து தங்கள் கனவுகளையும் விதைத்தனர். இந்த நாட்டைத் தங்கள் சொந்த நாடாகக் கருதி அதே உறுதிப்பாட்டுடன் உழைத்துவருகின்றனர். வளைகுடா நாடுகளின் மக்கள் குழுக்கள் இடையே நல்ல கூட்டுறவை நாங்கள் அனுபவிக்க இது ஒரு வகையில் உதவியுள்ளது. ஐக்கிய அரபு எமிரகத்தில் பட்டத்து இளவரசர் அபுதாபியில் கோயில் ஒன்றைக் கட்ட எடுத்துக்கொண்ட முயற்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கக் கூடும். இதற்காக 125 கோடி இந்திய மக்கள் சார்பில் பட்டத்து இளவரசருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கோயில் கட்டுமானம், அதுவும் நல்லெண்ணத்தின் பாலமான ஒரு கட்டுமானம். கோயிலானது மனிதகுலத்தின் ஊடகம் என்ற பாரம்பரியத்தில் நாம் வளர்க்கப்பட்டுள்ளோம். ஒரு புனித இடம் எங்கு அனைத்தையும் உள்ளடக்கிய மனிதாபிமான முகமையாக உள்ளதோ, அந்தப் புனித இடம் நல்லிணக்கத்தின் முகமையாகவும் இருக்கும். இந்தக் கோயில் அமையும் போது கட்டடக்கலையில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமையும் என்று நான் நம்புகிறேன். தொழில்நுட்ப ரீதியில் மட்டுமின்றி மக்களுக்கு நற்செய்தியை அளிப்பதிலும் அந்தத் தனித்தன்மை இருக்கும் என்று நம்புகிறேன். உலகம் முழுவதுமே ஒரே குடும்பம் என்ற ரீதியில் நாம் பின்பற்றும் வாழ்க்கை மந்திரம், உலகம் முழுமையும் எதிரொலித்து அதனை ஒரு குடும்பமாக மாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தும். இந்தக் காரணத்தினால், தனித்தன்மை வாய்ந்த இந்திய அடையாளம் இந்தக் கோயிலுக்கு இருக்கும்.

இந்தக் கோயிலின் கட்டுமானத்தில் தொடர்புடைய அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், இந்தியாவின் மீது இந்நாட்டு ஆட்சியாளர்கள் பெரும் மதிப்பு உடையவர்கள். இந்தியாவின் பண்பாட்டுப் பாரம்பரியத்திற்கு பெரும் மதிப்பு அளிப்பவர்கள் என்பதேயாகும். இந்நிலையில், எவ்விதத் தவறும் ஏற்படாமல், குறைபாடும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பாகும்.

மனிதகுலத்தின் உயரிய கொள்கைகள், கோட்பாடுகள் ஆகியவற்றை ஒரு சிறிதளவு கூட துன்புறுத்தாத நிலை ஏற்பட்டு நிலைக்க வேண்டும் என்பதை இக்கோயிலின் எதிர்காலப் பக்தர்களுக்கும், இந்தக் கோயில் கட்டுமானத்துடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் ஆன கட்டாயப் பொறுப்பு என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன். உங்கள் அனைவரிடம் இருந்தும் நான் எதிர்பார்ப்பதும் இதுவேயாகும்.

நாடு தற்போது புதிய மேம்பாட்டு உயர் நிலைமையை எட்டியுள்ளது. உலக நிலை உச்சிமாநாடுகளில் இந்தியாவுக்கு மதிப்புமிக்க இடம் வழங்கப்படுகிறது என்பது இந்தியாவுக்குக் கவுரவம் அளிக்கும் விஷயமாகும். இந்த உச்சிமாநாட்டில் உரையாற்ற நான் அழைக்கப்பட்டுள்ளேன். இந்தியாவை பற்றித் தகவல் சேகரிப்பது இங்கே கடினமான விஷயமல்ல. நீங்கள் இந்தியாவைப் பற்றி அறிந்துள்ள விஷயங்களின் அளவு எப்படிப்பட்டதெனில், நான் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச முயன்றால், நீங்கள் பத்து விஷயத்தைப் பற்றி பேசும் அளவுக்கு உள்ளது. இந்த இடத்தில் ஒரு சிறிய இந்தியாவே வாழ்கிறது எனலாம். இந்த நாட்டின் எந்தப் பகுதியிலும் இந்தியப் பிரதிநிதிகள் இல்லாமல் இல்லை. இந்நிலையில்தான், இந்தியா எவ்வளவு விரைவாக மாறி வருகிறது என்பதை நீங்கள் அனுபவப்பூர்வமாக பார்க்க இயலும். இத்தகைய நம்பிக்கை அடிப்படையில்தான், நாட்டின் 125 கோடி இந்தியர்களும் தங்கள் கனவுகளை நனவாக்கும் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

நாம் துயரமான நாட்கள் பலவற்றையும் பார்த்துள்ளோம். நண்பர்களே, நாம் அவற்றை விட்டுவிடுவோம். அவற்றை நினைப்பதால் எதுவும் நடக்கப் போவதில்லை. நண்பர்களே நாம் நமது சொத்துக்களை எடுத்துக்கொண்டு வேறு ஒரு இடம் செல்வோம். இதுபோன்ற நம்பிக்கையற்ற, பயம் கலந்த, குழப்பம் நிறைந்த காலத்தைக் கடந்து தாண்டி வந்திருக்கிறோம்.

இது சாத்தியம்தானா என நாட்டின் சாதாரண மனிதன் கேட்கும் காலம் ஒன்று இருந்தது. இது நடக்குமா.? இதனை நம்நாட்டில் செய்ய முடியுமா?, இத்தகைய நிலையிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் நாடு பெரிய அளவு முன்னேறியிருக்கிறது. இன்றைய நிலையில் இது சாத்தியமா, இது நடக்குமா என்று எவரும் கேட்பதில்லை. நண்பர்களே, நமது மனத்தை ஏன் பளுவாக்கிக்கொள்ள வேண்டும். இத்தகைய உணர்வுகளில் இருந்து விடுபட்டு மக்கள் என்னிடம் மோடி அவர்களே, இது எப்போது நடக்கும் என எங்களுக்குச் சொல்லுங்கள் என்று கேட்கும் நிலை உருவாகியுள்ளது. இப்போது புகார்களுக்குப் பதிலாக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது நடக்குமானால், அது இப்போதே நடக்கும் என்ற நம்பிக்கை.

உலகளவில் வர்த்தகம் புரிதல் எளிமை, நிலைமையைப் பொறுத்தவரை 2014-ல் நாம் 142-வது இடத்தில் இருந்தோம். அதாவது, கடைசி இடத்திலிருந்து எண்ணினால் எளிதாகவும், முதல் இடத்திலிருந்து எண்ணினால் நிறைய நேரம் பிடிப்பதாகவும் இருந்தது. இந்நிலையில் மிகக் குறுகிய காலத்தில் வர்த்தகம் புரிதலில் எளிமை நிலவுவதற்கு 42 புள்ளிகளைத் தாண்டி 100-வது இடத்தை பிடித்த சாதனையை வேறு எந்த நாடும் நிகழ்த்தியிருக்க முடியாது. எனினும், நாம் இதே இடத்தில் நின்றுவிடப் போகிறோம் என்று எவரும் கருத வேண்டியதில்லை. நாம் மேலும் மேம்பாடு அடைய விரும்புகிறோம். உலகத் தர நிலையில் உயர்ந்த நாடுகளுடன் இணையாக இருக்க விரும்புகிறோம். இதற்காகக் கொள்கைகளில் தேவையான மாற்றத்தைச் செய்ய தயாராக உள்ளோம். இந்த மாற்றம் அணுகுமுறையிலோ, அமலாக்கத் திட்டத்திலோ, ஆதாரங்களைப் பெறும் நடைமுறையிலோ எதிலாக இருந்தாலும் தேவையான அனைத்தையும் செய்ய தயாராக உள்ளோம்.

உலகமயமாதல் என்பது உலக மக்கள் அனைவரும் தங்கள் பொறுப்புக்களை ஒவ்வொருவருடனும் இணைந்து நிறைவேற்றுவது ஆகும். ஒவ்வொருவரிடமிருந்தும் கற்றுக்கொண்டு, ஒவ்வொருவரையும் அணைத்துச்சென்று கடைசி நாட்டின், கடைசி மனிதனின் நலம் பேணப்படும் உயர்நிலையை அடையும் வகையில் இந்தப் பயணம் தொடர வேண்டும். அப்போதுதான், வசுதெய்வ குடும்பகம் என்கிற உலகமே ஒரு குடும்பம் என்ற மந்திரம் வெறும் வார்த்தையல்ல, சாத்தியமான உண்மை என்பதை நிரூபிக்க முடியும்.

இந்த நிர்ணயம் இந்தியாவிற்கு உலகளவில் தனது கடமை பொறுப்புகளை நிறைவேற்றும் நிர்பந்தத்தை உருவாக்கியுள்ளது. 21 ஆம் நூற்றாண்டு ஆசியாவுக்கானது என்று இன்று உலகம் கூறுகிறது. ஆனால் இது தன்னிச்சையாக நடந்துவிடக் கூடிய ஒன்று அல்ல. நாம் கையைக் கட்டிக் கொண்டு இருப்போம், அது தானாகவே நடந்துவிடும் என்று கூறமுடியாது.

21 ஆம் நூற்றாண்டை ஆசியாவுக்குச் சொந்தமானதாக மாற்ற நாம் கடுமையாக, உடனடி பலன் ஏதும் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டும். நமது நீண்டகால நலன்களைக் கருதி, நாம் கடுமையாக உழைக்க வேண்டும். மகாத்மா காந்தியடிகள் நாம் கட்டாயம் செய்ய வேண்டும் எனப் பொருள்படும் ஷ்ரேயா, நாம் விரும்புவது என பொருள்படும் பிரியா என்பது பற்றி குறிப்பிட்டுள்ளார். கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கங்களின் திசையில் முன்னேறுவதற்கான முயற்சிகளை நாம் எடுத்தாக வேண்டும். நமக்கு இப்போது அது பிடிக்காமல் இருக்கலாம், பிடித்தும் இருக்கலாம். ஆனால், நமது நீண்டகால நலன்கருதி இவற்றை நாம் செய்தே ஆகவேண்டும்.

நாம் எடுக்கும் நடவடிக்கையை ஒருசிலர் உடனடியாகப் புரிந்து கொள்ள இயலும். மேலும் பலருக்கு அது கடினமான செயல். அவர்கள் புரிந்து கொள்ள கால அவகாசம் தேவைப்படும். நமது நாணயத்தை நான் மாற்றியமைத்தால், அது சரியான திசையில் எடுக்கப்பட்ட, சரியான நடவடிக்கை என்று சமுதாயத்தின் ஏழை பிரிவினர் உடனடியாக புரிந்து கொள்கின்றனர். ஆனால், தூக்கமில்லாத பல இரவுகளை கழித்தவர்கள் இந்த நடவடிக்கை எடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் அழுதுகொண்டு இருக்கிறார்கள்.

கடந்த ஏழு ஆண்டுகளாக ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்துவதா, இல்லையா என்ற விவாதம் நடைபெற்று வந்த்து. தற்போது அது அமலாகிவிட்டது. நாம் புதிய வீட்டுக்கு குடிவரும்போது, பல ஆண்டுகளாக பழைய வீட்டிலிருந்து இங்கு வந்ததற்கு மகிழ்ச்சி அடைவோம். ஆனால், முதலாவது நாள் இரவை கழித்த பின், அடுத்த நாள் காலை எழுந்து பழைய வீட்டு ஞாபகத்தில் குளியலறை இடது பக்கத்தில் உள்ளது என்ற எண்ணத்தில் நகரும் போது சுவரில் இடித்துக் கொள்வோம். பின்னர்தான், புதிய வீட்டுக்கு வந்துவிட்டோம் என்பதையும், குளியலறை வலது பக்கத்தில் உள்ளது என்பதையும் நினைவில் கொள்வோம். இந்த அனுபவத்தை அனைவரும் பெற்றுள்ளீர்களோ, இல்லையோ தெரியாது. மாற்றங்களால் ஒருவரது வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியருந்தால், அது இயல்பான விஷயம்தான். 125 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், 70 ஆண்டுகளுக்குப் பிறகு அமைப்புகள் மாற்றப்பட்டால் ஏற்படும் இடையூறுகளும் இயல்பானதே. பழைய பழக்கங்களோடு இரண்டு, மூன்று தலைமுறைகள் வாழ்ந்து, அந்த பழக்கங்கள் ரத்த்த்துடன் ஊறிப்போன நிலையில், மாற்றங்கள் ஏற்படும் போது கஷ்டங்கள் ஏற்படுவது இயல்புதான். எனினும், இந்த கஷ்டங்களை எதிர்கொள்வது நன்மையே பயக்கும்.

இந்த வழியைத்தான் மகாத்மா காந்தியடிகள் நமக்கு காட்டினார். இன்றைய தினம் ஜிஎஸ்டி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அமைப்பாக உருவெடுத்து, அமலபடுத்தப்பட்டு வருகிறது. அதிலிருந்த குறைபாடுகள் மிகக் குறுகிய காலத்திலேயே சரிசெய்யப்பட்டுவிட்டன. நாடு மாறிக் கொண்டிருக்கிறது.

நான் நேற்று அபுதாபியில் இருந்தேன், பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டேன். லோயர் ஜாக்கும் சலுகை ஒப்பந்தமும் அதில் ஒன்று. இந்த ஒப்பந்தம் மேலோங்கி வரும் மத்திய கிழக்கு பகுதியில் இந்திய நிறுவனம் ஒன்று மேற்கொண்டுள்ள முதலாவது முதலீட்டு ஒப்பந்தமாகும். இத்துடன் கூட்டுறவுப் பங்களிப்பின் பிரகாசமான அம்சம் தொடங்கியுள்ளது. இதனைக் குறிப்பிட நான் விரும்புகிறேன். நான் அடுத்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவிருப்பதால், மேலும் அதிக நேரம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. பெருந்திரளான எண்ணிக்கையில் இங்கு வந்து கலந்துகொண்டிருக்கிறீர்கள். அபரிமிதமான அன்பையும் காட்டியிருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் இதற்காக நான் மிகவும் நன்றியுடையவனாக உள்ளேன்.

நான் இந்தப் பயணத்தை ஜெட் வேகத்தில் முடித்துள்ளேன். மேலும் 70-80 மணிநேரத்திற்குள் ஐந்து நாடுகளில் பயணம் மேற்கொண்டுவிட்டு மீண்டும் இங்கு திரும்பி வருகிறேன். ஜோர்டான், பாலஸ்தீனம், அபுதாபி, தற்போது துபாய். இங்கிருந்து நான் ஓமன் செல்கிறேன். இன்று மாலை பெருந்திரளான இந்திய சமுதாயத்தினரைச் சந்திக்கும் அதிர்ஷ்டம் எனக்கு மீண்டும் ஏற்பட உள்ளது. என்னுடைய கருத்துக்களில் சிலவற்றை அவர்களுடனும் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். எந்தக் கனவு உங்களிடம் உள்ளதோ, இந்தியாவில் உள்ள உங்கள் மக்களிடம் எந்தக் கனவு உள்ளதோ, அவற்றையெல்லாம் நனவாக்க, அதுவும் உரிய காலத்திற்கு முன்னதாகவே நனவாக்க நாம் ஒருங்கிணைந்த உழைக்க இருக்கிறோம். இந்த விஷயத்தில் எனது உறுதிமொழியை அளிக்க விரும்புகிறேன். மீண்டும் அனைவருக்கும் மிக்க நன்றி.

வணக்கம்