பி.எம்.இந்தியா
புது தில்லியில் பொது இடத்தில் சிறுநீர் கழிக்க முயன்ற இருவரை தடுத்து நிறுத்திய இ-ரிக்க்ஷா ஓட்டுநர் திரு. ரவீந்திர குமார் அடித்து கொல்லப்பட சம்பவத்தில், ஓட்டுநரின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ரூ. ஒரு லட்சம் நிதி நிவாரணம் வழங்கியுள்ளார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த பிரதமர், இந்த மனித விரோத செயல் புரிந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து, தண்டிக்க வேண்டும் என்று கூறினார். வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்த நிவாரண உதவியை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் திரு. வெங்கையா நாயுடு புது தில்லி ஜி.டி.பி நகரில் உள்ள அந்த இ-ரிக்க்ஷா ஓட்டுநர் குடும்பத்தினரை சந்தித்தார். தன்னுடைய சம்பளத்தில் இருந்து ரூ. 50,000-ற்கான காசோலையை வழங்கிய அமைச்சர், ஓட்டுநரின் இந்த செயலை பாராட்டினார். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்று அமைச்சர் திரு. வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.
****