பி.எம்.இந்தியா
தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1998-ல் பொக்ரானில் வெற்றிகரமான சோதனைகளுக்கு வழிவகுத்த விஞ்ஞானிகளின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பிரதமர் பெருமையுடன் நினைவுகூர்ந்தார். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இந்தியாவின் அறிவியல் மேன்மையையும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பிரதிபலித்தது என்று அவர் குறிப்பிட்டார்.
தற்சார்பு இந்தியாவைக் கட்டமைப்பதில் தொழில்நுட்பம் ஒரு முக்கியத் தூணாக உருவெடுத்துள்ளது என்று பிரதமர் கூறினார். அது புத்தாக்கத்தை விரைவுபடுத்துவதாகவும், வாய்ப்புகளை விரிவுபடுத்துவதாகவும், நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்துத் துறைகளிலும் பங்களிப்பதாகவும் திரு மோடி குறிப்பிட்டுள்ளார். திறமையாளர்களை மேம்படுத்துதல், ஆராய்ச்சியை ஊக்குவித்தல், தேசிய முன்னேற்றம், மக்களின் விருப்பங்கள் ஆகிய இரண்டிற்கும் சேவை செய்யும் தீர்வுகளை உருவாக்குதல் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை பற்றிப் பேசிய பிரதமர், 1998-ம் ஆண்டு இதே நாளில் பொக்ரானில் நடத்தப்பட்ட அணு வெடிப்பு சோதனைகள், இந்தியாவின் வியத்தகு திறன்களை உலகிற்கு வெளிப்படுத்தின என்று குறிப்பிட்டார். நாட்டின் பெருமை மற்றும் சுயமரியாதையின் உண்மையான சிற்பிகள் விஞ்ஞானிகள்தான் என அவர் பாராட்டினார்.
ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்துள்ள பிரதமர், அக்னி என்பது வானத்தின் உன்னத சக்தி என்றும், பூமியில் உள்ள அனைத்து ஆற்றல்களுக்கும் முதன்மை ஆதாரம் இது என்றும் குறிப்பிட்டார். அனல் கக்கும் இதன் சாரம், பருப்பொருளின் மிகச்சிறிய துகள்களுக்குள் மறைந்திருக்கும் அளவற்ற சக்தியைத் தட்டி எழுப்பி, படைப்பு முழுவதும் ஆற்றலையும் இயக்கத்தையும் பரப்புகிறது.
சமூக ஊடக எக்ஸ் தளத்தின் தொடர்ச்சியான பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“தேசிய தொழில்நுட்ப தின வாழ்த்துகள். 1998-ல் பொக்ரானில் வெற்றிகரமான சோதனைகளுக்கு வழிவகுத்த நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் நாம் பெருமையுடன் நினைவுகூர்கிறோம். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், இந்தியாவின் அறிவியல் மேன்மையையும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பிரதிபலித்தது.
தற்சார்பு இந்தியாவைக் கட்டமைப்பதில் தொழில்நுட்பம் ஒரு முக்கியத் தூணாக உருவெடுத்துள்ளது. அது புத்தாக்கத்தை வேகப்படுத்துகிறது, வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது, நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது. திறமையாளர்களுக்கு வலுவூட்டுவது, ஆராய்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் தேசிய முன்னேற்றத்திற்கும் நமது மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான தீர்வுகளை உருவாக்குவது ஆகியவற்றில் எங்களின் கவனம் தொடர்ந்து நிலைத்திருக்கும்.
அக்னி என்பது வானத்தின் உன்னத சக்தி என்றும், பூமியில் உள்ள அனைத்து ஆற்றல்களுக்கும் முதன்மை ஆதாரம் இது என்றும் குறிப்பிட்டார். அனல் கக்கும் இதன் சாரம், பருப்பொருளின் மிகச்சிறிய துகள்களுக்குள் மறைந்திருக்கும் அளவற்ற சக்தியைத் தட்டி எழுப்பி, படைப்பு முழுவதும் ஆற்றலையும் இயக்கத்தையும் பரப்புகிறது.
(Release ID: 2259658)
***
SS/SMB/SH
Greetings on National Technology Day. We recall with pride the hard work and dedication of our scientists, which led to the successful tests in Pokhran in 1998. That landmark moment reflected India’s scientific excellence and unwavering commitment.
— Narendra Modi (@narendramodi) May 11, 2026
Technology has become a key…
वर्ष 1998 में आज के दिन पोखरण में हुए परमाणु परीक्षण ने दुनिया को भारत के अद्भुत सामर्थ्य से परिचित कराया।
— Narendra Modi (@narendramodi) May 11, 2026
हमारे वैज्ञानिक देश के गौरव और स्वाभिमान के सच्चे शिल्पी हैं।
अग्निर्मूर्धा दिवः ककुत्पतिः पृथिव्या अयम्।
अपां रेतांसि जिन्वति॥ pic.twitter.com/ufKK8gUbtd