Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய போர் நினைவுச் சின்னம், தேசிய போர் அருங்காட்சியகம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான இடங்கள் தேர்வு


தேசிய போர் அருங்காட்சியகத்தை உருவாக்குவதற்கு பிரின்சஸ் பார்க் வளாகம் பொருத்தமானதாக இருக்கும் என்ற அதிகாரம்பெற்ற உயர்மட்ட செயல்பாட்டுக் குழுவின் முடிவு பற்றி பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுத்துக் கூறப்பட்டது.

தேசிய போர் நினைவுச் சின்னத்தைப் பொறுத்தவரை, இந்தியா கேட் வளாகத்தின் ‘சி’ அறுகோண பகுதியில் அதை உருவாக்குவது என 2015 அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.