Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தொடங்கிடு இந்தியா இயக்கம் – பிரதமர் நாளை துவக்கி வைப்பார்


தொடங்கிடு இந்தியா இயக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் துவக்கி வைக்க உள்ளார். நாட்டில் உள்ள இளைஞர்களின் தொழில் முனைவோர் எண்ணத்தை கொண்டாடுவதை இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். அயல் நாடுகளிலும் இந்தியாவில் உள்ள முன்னனி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் நிறுவனர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

விஞ்ஞான் பவனில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிடும் பிரதமர் தொடங்கிடு இந்தியா தொழில் முனைவோர்களிடம் கலந்துரையாட உள்ளார். தொடங்கிடு இந்தியாவின் செயல் திட்டத்தை வெளியிட்டு பார்வையாளர்களுடன் பிரதமர் உரையாடுவார்.

விஞ்ஞான் பவனுக்கு பிரதமர் வந்தடைந்தபின், தொடங்கிடு இந்தியா தொழில் முனைவோர் திட்டம் குறித்து ஒருநாள் பயிலரங்கம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு அம்சங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெறும்.

கொள்கை முடிவு எடுப்பவர்களின் நேருக்கு நேர் என்ற முக்கிய கேள்வி பதில் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு தொடங்கிடு இந்தியா தொழில் முனைவோருக்கான சுற்றுச்சூழலை எப்படி உருவாக்குகிறது என்ற கேள்விகளுக்கு முக்கிய அமைச்சகங்கள் மற்றும் துறைகளிள் செயலர்கள் பதில் அளிக்க உள்ளனர். தொடங்கிடு இந்தியா தொழில் முனைவோர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை அரசு உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பை உறுதி செய்வதே இதன் குறிக்கோளாகும்.

சாப்ட் வங்கியின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. மசாயோஷி சன் மற்றும் விவர்க்கின் நிறுவனர் திரு. ஆடம் நியு மேன் போன்ற சர்வதேச தலைவர்களும் தொழில் முனைவோர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துரையாட உள்ளனர்.

இந்தியாவில் உள்ள 350 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள இளைஞர் குழுக்கள், மத்திய பல்கலைக் கழகங்கள், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய மேலாண்மை நிறுவனங்கள், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகிய இடங்களில் இந்நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.