பி.எம்.இந்தியா

அனைவருக்கும் வாழ்த்துகள்!
இது 2020 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர். இந்த 10 ஆண்டுகளின் முதல் கூட்டத் தொடரும் ஆகும். இந்த 10 ஆண்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் இந்தக் கூட்டத் தொடரை நாம் மாற்ற வேண்டும். இன்று மேதகு குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்; நாளை இந்தாண்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. உலகப் பொருளாதார சூழலில் இந்தியா பயன்பெறும் விதத்தில் இந்தக் கூட்டத் தொடரில், கூடுதலாக பொருளாதார விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் மூலம் உலகச் சூழலில் இந்தியா மிக அதிகமான பயன்களைப் பெற வேண்டும். ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, நலிவடைந்த பிரிவு மக்கள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்கான அரசாக நமது அரசு அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தப் பத்தாண்டுகளிலும் இதே நிலையில் நாம் கவனம் செலுத்துவோம். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார விஷயங்கள் குறித்தும் மக்களுக்கு அதிகாரமளித்தல் குறித்தும் விரிவான, சிறப்பான விவாதங்கள் நடத்தப்பட வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நமது விவாதத்தின் தரம் வருங்காலத்தில் செழுமை உள்ளதாக திகழ வேண்டும். இந்த நம்பிக்கையுடன் உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். வணக்கம்!
Speaking at the start of the Budget Session of Parliament. https://t.co/CIMbUsXOVV
— Narendra Modi (@narendramodi) January 31, 2020