Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் பிரதமர் நாளை உரையாடுகிறார்.


 

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை காலை 9.30 மணிக்கு காணொலி பதிவு மூலம் உரையாடுகிறார். இந்த உரையாடல் மூலம் விவசாயிகளின் பேச்சை பிரதமர் நேரடியாக கேட்க முடியும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்த முயற்சிகளும் இந்த உரையாடலின்போது விவாதிக்கப்படும். வேளாண் அறிவியல் மையங்கள், பொது சேவை மையங்கள், தூர்தர்ஷன், டி.டி. கிஸான் மற்றும் ஆகாஷவானியில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒலிபரப்பப்படும். “நரேந்திர மோடி செயலி” மூலம் பொதுமக்கள் பிரதமருடன் நேரடியாக உரையாட முடியும்.