Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடு முழுவதும் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து


நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்துகளை தெரிவித்துக் கொண்டார். இது தொடர்பாக டுவிட்டர் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள தொடர்ச்சியான பதிவுகளில் இந்த பண்டிகைகள் நமது வாழ்வில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தட்டும் என கூறியுள்ளார்.

“இந்தியா முழுவதும் நாம் பல்வேறு பண்டிகைகளை கொண்டாடும் நேரத்தில் நமது குடிமக்களுக்கு எனது வாழ்த்துகள். இந்த பண்டிகைகள் நமது வாழ்வில் உற்சாகத்தையும் வளத்தையும் கொண்டு வரட்டும்.

குஜராத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் உத்தராயணத்தை முன்னிட்டு வாழ்த்துகள்.

மாக் பிகுவை முன்னிட்டு அசாம் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

போகியை கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த நாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியை கொண்டுவரட்டும்.

தமிழ் நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள்.

மகர சங்கராந்தியில் நான் எனது இதயபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டர் பதிவுகளில் பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு அந்தந்த மொழியிலேயே பிரதமர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.