Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் நன்றி


நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி உலகத் தலைவர்கள் தெரிவித்த அன்பான வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலுமிருந்து பெறப்பட்ட வாழ்த்துச் செய்திகளுக்கு தமது ஆழ்ந்த மகிழ்ச்சியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கேவுக்கு, நன்றி தெரிவித்து, பிரதமர் திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே அவர்களே, உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. தொடர்ந்து வலுப்பெற்று வரும் பூட்டானுடனான இந்தியாவின் சிறப்புமிக்க, நீடித்த ஒத்துழைப்பை நாங்கள் ஆழமாக மதிக்கிறோம்.”

ஸ்லோவாக்கியாவின் அதிபர் திரு பீட்டர் பெல்லெக்ரினியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஸ்லோவாக்கியா அதிபர் பெல்லெக்ரினி அவர்களே, உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தியாவுக்கும் ஸ்லோவாக்கியாவுக்கும் இடையேயான விரிவான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நாங்கள் ஆவலுடன் உள்ளோம்.”

மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்ஸுவுக்கு நன்றி தெரிவித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“அதிபர் முய்ஸு அவர்களே, உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான நட்புறவு மேலும் வலுப்பெறட்டும்.”

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு நன்றி தெரிவித்து, சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“என் நண்பரே, உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி!”

நேபாளப் பிரதமர் திரு பலேந்திர ஷாவிக்கு நன்றி தெரிவித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“நேபாளப் பிரதமர் பலேந்திர ஷா அவர்களே, உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. நமது நாட்டு மக்களின் பரஸ்பர செழிப்பு, நல்வாழ்விற்காக, இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையேயான பன்முக, தொன்மையான நாகரிக உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.”

நேபாளத்தைச் சேர்ந்த ரபி லாமிச்சானேவுக்கு நன்றி தெரிவித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ரபி லாமிச்சானே அவர்களே, உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. பரஸ்பர முன்னேற்றம், செழிப்புக்காக இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான ஆழமான நட்புறவை வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.”

****

(Release ID: 2299924)

SS/PLM/RJ