Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நியூசிலாந்தில், பிரதமர் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் பலன்கள்

நியூசிலாந்தில், பிரதமர் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் பலன்கள்


இந்தியா – நியூசிலாந்து இடையே, கடல்சார் பாதுகாப்பு உட்பட பாதுகாப்புத் துறையில், ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள், ஒருங்கிணைப்பு, தகவல் பரிமாற்றம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பை மேம்படுத்துதல், நீரியல் ஆய்வு, கடல்சார் செயல்திட்டத் தயாரிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது என இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.

வழிகாட்டுதலுக்கான செயல்திட்டங்களின் கூட்டுத் தயாரிப்பு, நீரியல் தரவுப் பகிர்வு, பயிற்சி, திறன் மேம்பாடு ஆகிய நடவடிக்கைகள் மூலம், நீரியல் ஆய்வுத் துறையில் ஒத்துழைப்பை இது வலுப்படுத்துகிறது.

இந்தியக் கடற்படை மற்றும் நியூசிலாந்து பாதுகாப்புப் படைக்கும் இடையே, பரஸ்பர ஆயுதத் தளவாட ஆதரவை (Logistics வழங்குவதன் மூலம், அங்கீகரிக்கப்பட்ட, செயல்பாடுகளின் போது, பரஸ்பரம் தளவாட ஆதரவை இது எளிதாக்குகிறது.

இரு நாடுகளுக்குமிடையே பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்களுக்கான கூட்டுப் பணிக்குழுவை அமைப்பதன வாயிலாக, அதனை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், முயற்சிகளை ஒருங்கிணைக்கவும் வகை செய்கிறது.

இந்தியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்,  நியூசிலாந்தின் தேசிய அவசரகால மேலாண்மை முகமை இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம்,

நிலநடுக்கத்தைத் தாங்கும் திறன், சுனாமிக்கான தயார்நிலை, கடலோர ஆபத்துத் தணிப்பு நடவடிக்கை, அறிவுசார் பரிமாற்றம், கொள்கை உரையாடல், திறன் மேம்பாடு ஆகிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, பேரிடர் அபாய மேலாண்மையில், இணைந்து செயல்படுவதற்கு ஊக்குவிக்கிறது.

இந்தியாவின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகம், நியூசிலாந்தின் முதன்மைத் தொழில்கள் அமைச்சகம் இடையே, கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, அறிவுசார் பரிமாற்றம், சிறந்த நடைமுறைகள் மூலம் கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறைகளில் மேம்பட்ட செயல்பாடுகளுக்கான கட்டமைப்பை இது உருவாக்க உதவிடும்.

இந்திய சுற்றுலா அமைச்சகம் – நியூசிலாந்தின் வணிகம், புத்தாக்கம், வேலைவாய்ப்பு அமைச்சகம் இடையே, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கானத் திட்டங்களின் மூலம், பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், இரு நாடுகளின் கலாச்சாரம் குறித்த பரஸ்பர புரிதலை மேம்படுத்தவும், சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை ஊக்குவிக்க வகை செய்கிறது.

விளையாட்டுத் துறை சார்ந்த கூட்டுச் செயல் திட்டம், உயர்திறன் விளையாட்டு, விளையாட்டு அறிவியல், விளையாட்டு மருத்துவம், விளையாட்டு வீரர்களின் மேம்பாடு உள்ளிட்ட ஒத்துழைப்பிற்கான ஒரு கட்டமைப்பை இது வழங்குகிறது.

குஜராத் மாநிலம் லோத்தலில், தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை மேம்படுத்துவது தொடர்பாக, அந்நாட்டின் கடல்சார் அருங்காட்சியகத்துடனான ஒப்பந்தம், கூட்டு முயற்சி, பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டங்கள் வாயிலாக, லோத்தலில், இணைந்து செயல்படுவதற்கான  கட்டமைப்பை இது வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283528&reg=3&lang=1

****

TV/SV/RJ