Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நீர் வளத்தைப் பாதுகாக்க இளைஞர் அமைப்புகள் கரம் கோர்த்து முன்வர பிரதமர் அழைப்பு

நீர் வளத்தைப் பாதுகாக்க இளைஞர் அமைப்புகள் கரம் கோர்த்து முன்வர பிரதமர் அழைப்பு


என்.சி.சி, என்.எஸ்.எஸ், பாரத் ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ், செஞ்சிலுவை சங்கம் மற்றும் நேரு யுவ கேந்திரா அமைப்புகள் உள்ளிட்ட அதிகாரபூர்வ இளைஞர் அமைப்புகளின் பணி குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி திங்களன்று ஆய்வு செய்தார்.

இரண்டு மணி நேரம் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் இளைஞர் அமைப்புகள் தங்களுக்குள் இணக்க மாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இளைஞர் அமைப்புகள் உடனடிப் பணிகள் குறித்து விவாதித்த அவர் அடுத்த இரண்டு மாதங்களில் இளைஞர் அமைப்புகள் மிக முக்கியப் பணிகளை ஆற்ற முடியும் என்று குறிப்பிட்டு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் நீர்வளத்தை சேமித்து வைப்பதற்கான பிரமாண்டத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது என்றார். இந்த முயற்சிகளுக்கு இளைஞர் அமைப்புகள் அணிதிரண்டு தங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் அமைப்பின் பிரதிநிதிகள் சமுதாயத்தில் தங்களின் பங்களிப்பையும் செயல்பாட்டையும் விளக்கினார்கள். பிரதமர் மேலும் பல தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார். குறிப்பாக, தூய்மைப்பணி, திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத குழுமங்களை உருவாக்குதல், இளைஞரிடையே தேசிய புத்துணர்வை ஊட்டுதல் போன்றவை இளைஞர் அமைப்புகளின் பிரதானப் பணி என்று குறிப்பிட்டார். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் அரசின் இந்திர தனுஷ் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதிலும் இளைஞர்கள் முன்முயற்சி எடுத்து உதவ முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஜனவரி 12-ந் தேதி இளைஞர் தினத்தன்று எடுத்துக் கொள்ளப்படும் திட்டங்களை நிறைவேற்ற இளைஞர் அமைப்புகள் இணக்கமான முறையில் முன்முயற்சி எடுத்து செயல்பட்டால் அதன் தாக்கம் பொருள் பொதிந்ததாக விளங்கும் என்று பிரதமர் கூறினார். இந்தப் பணிகள் சிறக்க சமூக வலைத்தளங்களில் மேலும் பங்கேற்று இளைஞர்களிடையே இணைப்பை ஏற்படுத்தி இந்த திட்டங்கள்பால் அவர்களின் ஆர்வத்தை தூண்டவும் இளைஞர் அமைப்புகள் பாடுபட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.