Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மறைவு-பிரதமர் இரங்கல்


நேபாளத்தின் முன்னாள் பிரதமர் திரு. சுஷில் கொய்ராலா மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது.

நேபாளத்திற்கு பல ஆண்டுகள் சேவை செய்து வந்த திரு சுஷில் கொய்ராலா மறைவினால் மூலம் நேபாளி காங்கிரஸ் ஒரு பெருந்தலைவரை இழந்து விட்டது. இந்தியா தனது முக்கியமான நண்பரை இழந்துள்ளது. அவரின் மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.

திரு சுஷில் கொய்ராலாவின் எளிமை நம் அனைவருக்கும் பாடம் கற்பிக்கும் வகையில் இருந்தது. இந்தத் துயரமான நேரத்தில் கொய்ராலாவின் குடும்பத்தினருக்கும் நேபாள மக்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.