Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து


நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டி முழுவதும், இந்திய மகளிர் அணி மிகச் சிறப்பாக விளையாடியதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மகளிர் அணிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த திரு மோடி, இந்த வெற்றி ஹாக்கி விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்த உதவிடும்  என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் திரு மோடி வெளியிட்டுள்ள பதிவில்  கூறியிருப்பதாவது:

“இந்திய ஹாக்கி வீராங்கனைகள் நாட்டிற்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் சேர்த்துள்ளனர்!

நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் அணிக்கு வாழ்த்துகள். இந்த போட்டி முழுவதும் இந்திய மகளிர்  அணி மிகச் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய மகளிர் அணிக்கு எனது வாழ்த்துகள்.

இந்த வெற்றி ஹாக்கி விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க உதவிடும்”.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276215&reg=3&lang=1

****

TV/SV/RJ